செல்லப்பிராணிகள்
வீட்டு மிருகங்களான நாய்கள், பூனைகள், பறவைகள், முயல்கள் மற்றும் அலங்கார மீன்கள் ஆகியன பயணப்பொதிகளுக்கூடாக விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். வழமைக்கு மாறான அளவு அல்லது தன்மை கொண்ட மிருகங்களான குரங்குகள், பாம்புகள் போன்றவை பயணப்பொதிகளுக்கூடாக எடுத்துச் செல்லப்பட முடியாது. இவை ஸ்ரீலங்கனின் சரக்குப் பிரிவுக்கூடாகவே கையாளப்படும். தடைவிதித்தல் / நிபந்தனைகள் அமுலில் இருக்கும்.
ஸ்ரீலங்கன் விமானசேவையின் சில விமானங்களில் உள்ள சரக்குப் பிரிவானது செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கு ஏதுவான தகுந்த வெப்பநிலையைக் கொண்டிருக்காது. எனவே, விமானத்தில் நீங்கள் கொண்டு செல்லவிருக்கும் செல்லப் பிராணி குறித்து உங்களின் பயணச்சீட்டு முகவருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் செல்லப்பிராணியின் பயணத்திற்கு ஏற்ற வசதியினைக் கொண்ட விமானமொன்றை ஒழுங்கு செய்க. நீங்கள் பயணம் செய்ய விரும்பும் திகதிகளில் உங்கள் செல்லப்பிராணியின் தேவையை ஈடு செய்யக்கூடிய வசதி கொண்ட விமானங்கள் எம்மிடம் இல்லாத சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
பயணப் பொதிகளுக்கூடாக கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக மேலதிக பயணப்பொதிக் கட்டணம் அறவிடப்படும். எனினும் செல்லப்பிராணி , கொள்கலன் (கூடு), உணவுப் பொருட்கள் என்பன இலவச பயணப்பொதி கொடுப்பனவின் கீழ் செல்லுபடியாகாது.
சுகாதாரத் தேவைப்பாடுகள்
பயணி அனைத்துப் பயண இலக்குகள் மற்றும் விமானம் மாறிச் செல்லும் இடங்களில் சுங்கத் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய தேவைப்பாடுகளுடன் இணங்கி நடப்பதற்கு முழுமையான பொறுப்புடையவராவார். செல்லுபடியாகும் தடுப்பூசிச் சான்றிதழ், இறக்குமதி / ஏற்றுமதி / விமானம் மாறுவதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அவசியமான ஆவணங்கள் விமான நிலையம்(கள்) மற்றும் இட ஒதுக்கீட்டின்போது சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பொறுப்புக்கூறல்
வெவ்வேறு விமானங்கள் மூலம் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் பயணிகள் அடுத்த விமானத்திலும் தனது செல்லப் பிராணி தொடர்ந்து பயணிக்கும் என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது தனது விமானங்கள் பயணிக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாத்திரமே பொறுப்பு வகிக்கும்.
செல்லப் பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கு ஏற்றுக் கொள்வதென்பது பயணி மிருகத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவே அமையும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது மிருகம் அல்லது பறவைக்கு ஏற்படக்கூடிய காயம், இழப்பு, சுகயீனம் அல்லது இறப்பு ஆகியவற்றுக்கும் விமானங்கள் மாறிச் செல்லும் இடங்கள் மற்றும் / அல்லது பயண இலக்கில் நாயின் உள்வருகைக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கன் விமானசேவை அதனை பொறுப்பேற்க மாட்டாது. இச்சந்தர்ப்பத்தில் உங்களின் பயணச்சீட்டு முகவரிடம் நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்.
சேவை வழங்கும் மிருகங்கள் (பார்க்கும் கண்கள் / கேட்கும் நாய்கள்)
பார்வைத்திறன் அல்லது செவித்திறனற்ற அவன் / அவள் உண்மையில் நாய் ஒன்றில் தங்கியிருப்பார்களாயின் மாத்திரம் குறித்த பயணியுடன் சேவை வழங்கும் மிருகங்கள் (பார்க்கும் கண்கள் / கேட்கும் நாய்கள்) செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
இவ்வாறான நாய் எவ்வித மேலதிக கட்டணமுமின்றி விமானத்தின் பிஸ்னஸ் அல்லது எக்கனமி வகுப்பில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும் சேவை வழங்கும் மிருகங்களை விமானத்தில் கொண்டு செல்லும்போது உயிருள்ள மிருகங்களுக்கான IATA ஒழுங்குவிதி முறைகள் அமுலில் இருக்கும்.
பயணத்திற்கு முன்னர்
புறப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமானசேவைக்குத் தெரியப்படுத்தவும்.
புறப்படுவதற்கு ஆகக்குறைந்தது 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமானத்திற்காக செக் - இன் செய்யவும்.
குறித்த மிருகமானது தனது மாற்றுத்திறனுக்கு உதவும் வகையில் சேவை வழங்குவதாக பயணி நம்பகத்தன்மையுடன்கூடிய வாய்மூல உறுதி மொழியை வழங்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். விமானப் பயணத்தின்போது தன்னுடன் வரும் மிருகத்தை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அதேபோன்று நாயினுடைய கழிவுகளால் விமானத்திற்குள் சுகாதார மற்றும் கழிவகற்றல் பிரச்சினை ஏற்படாத வகையில் சமாளிக்க முடியுமென்றும் பயணி உறுதி செய்ய வேண்டும். அவன் / அவள் இதற்கு தேவைப்படும் உறிஞ்சும் அல்லது ஏனைய அவசியமான துடைப்பான்களை தம்முடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.
விமானப் பயணத்திற்கு முன்பாக நாய்க்கு அவசியமான உடற்பயிற்சியினை வழங்குவதுடன் உள்ளெடுக்கும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது நாய் விமானப் பயணத்திற்குத் தயாராக இருப்பதனை பயணி உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பு 1:
சேவை வழங்கும் மிருகமானது நடை பாதை அல்லது அவசர வெளியேறுகையினை குறுக்கிடும் வகையில் அல்லது பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கூடிய பயணியின் கால் வசதியைப் பாதிக்கும் வகையில் அமர்த்தப்படுதல் கூடாது.
சேவை வழங்கும் மிருகத்தின் செயற்பாடுகளில் குழப்பம் ஏற்படுமாயின் அல்லது பயணியின் காலடியில் அல்லது ஆசனத்தின்கீழ் அவருக்கான இடவசதியில் இடையூறினை ஏற்படுத்தாத வகையில் அமர்த்த முடியாமல் உருவத்தில் பெரியதாக இருப்பின் அல்லது அமரும்போது நடை பாதையை சிறிதளவேனும் தடுக்குமாயின் குறித்த நாய் கூட்டில் ( பயணியினால் வழங்கப்படுவது) விமான சரக்குப் பிரிவினூடாகக் கொண்டு செல்லப்படல் வேண்டும். இம்முறை முற்றிலும் இலவசமாகும். சேவை வழங்கும் மிருகத்தின் பாதுகாப்பிற்காக வெப்பநிலையை மாற்றம் செய்வதனை உறுதி செய்யும் வகையில் நாயின் கூடானது IATA இற்கு அமைய நாய்க்கூட்டின் அமைப்பு முறை மற்றும் அளவினை பூர்த்தி செய்வதாக அமைதல் வேண்டும். ஸ்ரீலங்கன் விமானத்தில் ஒரேயொரு சேவை வழங்கும் மிருகம் மாத்திரமே முற்பதிவு செய்வதற்கும் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
குறிப்பு : 2
ஸ்ரீலங்கன் விமானசேவையின் சில விமானங்களிலுள்ள சரக்குப் பிரிவில் தகுந்த வெப்பநிலையை ஏற்படுத்த முடியாமை காரணமாக உயிருள்ள மிருகங்களைக் கொண்டு செல்வதற்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம். விமானசேவையின் சரக்குப் பிரிவில் சேவை வழங்கும் மிருகத்தைக் கொண்டு செல்ல நேரிடுமாயின் ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக சேவை வழங்கும் மிருகத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முற்பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
சுகாதாரத் தேவைப்பாடுகள்
பயணியானவர் அனைத்துப் பயண இலக்குகள் மற்றும் விமானம் மாறிச் செல்லும் இடங்களில் சுங்கத் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய தேவைப்பாடுகளுடன் இணங்கி நடப்பதற்கு முழுமையான பொறுப்புடையவராவார். செல்லுபடியாகும் தடுப்பூசிச் சான்றிதழ், இறக்குமதி / ஏற்றுமதி / விமானம் மாறுவதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அவசியமான ஆவணங்கள் விமான நிலையம்(கள்) மற்றும் இட ஒதுக்கீட்டின்போது சமர்பிக்கப்படுதல் வேண்டும்.
பொறுப்புக்கூறல்
வெவ்வேறு விமானங்கள் மூலம் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் பயணிகள் அடுத்த விமானத்திலும் தனது செல்லப் பிராணி தொடர்ந்து பயணிக்கும் என்பதனை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது தனது விமானங்கள் பயணிக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாத்திரமே பொறுப்பு வகிக்கும்.
பயணி தனது பயணத்திற்கான ஆவணங்களை முறையாகச் சமர்பிக்காமை காரணமாக ஏதேனும் ஒரு நாட்டிற்குள் நாயின் உள்வருகைக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுமாயின் விமானசேவை அதனைப் பொறுப்பேற்க மாட்டாது.
சேவை வழங்கும் மிருகம் பயணியுடன் விமானத்தில் செல்லும்போது அதன் சுகாதாரம் மற்றும் நலன் குறித்து ஸ்ரீலங்கன் விமானசேவை பொறுப்பு வகிக்க மாட்டாது. விமானப் பயணத்தின்போது, முன்னர், மற்றும் பின்னர் ஏற்படக்கூடிய காயம், சுகயீனம் மற்றும் / அல்லது இறப்புக்கு அதன் உரிமையாளரே பொறுப்பு வகித்தல் வேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள்
உங்களின் சேவை வழங்கும் மிருகம் விமானத்தில் உங்களுடன் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்காக கீழ்வரும் வழிகாட்டல்களுடன் நீங்கள் ஒழுகுவதனை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- நாயைத் தடவிக்கொடுத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது கட்டுப்பாட்டை மீறாத வகையில் சிறந்த முறையில் நடத்தப்படல் வேண்டும். சுத்தமாகவும் துர்நாற்றம் வீசாமலும் இருத்தல் வேண்டும். நாய்ச் சங்கிலியானது விமானப் பயணம் முழுவதிலும் உரிமையாளரின் ஆசனப்பட்டியுடன் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- விமானத்திற்குள் அலைந்து திரிவதற்கு அனுமதிக்கப்படாத அதேநேரம் எப்போதும் பயணியின் ஆசனத்திற்கு அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
- விமானத்தின் தரை மாசுபடுவதனைத் தவிர்க்கும் வகையில் உறிஞ்சும் தன்மை கொண்ட விரிப்பினை எப்போதும் நாய் அமரும் இடத்தில் விரித்திருத்தல் வேண்டும்.