அறிமுகம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிட்டெட் (ஸ்ரீலங்கன்) நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு வரவேற்கிறோம்.
ஸ்ரீலங்கன் என்பது PB 67 என்ற நிறுவனப் பதிவு எண்ணைக்கொண்ட மற்றும் “ஏர்லைன் சென்டர்”, பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் , காட்டுநாயக்கே, ஸ்ரீலங்கா என்ற முகவரியில் பதிவு பெற்ற அலுவலகத்தைக் கொண்டுள்ள, ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும்.
உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம், உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு அக்கறையுடன் கையாளப்படும் என்று உங்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுதல், எங்கள் வலைத்தளம் அல்லது குளோபல் காண்டாக்ட் சென்டர் மூலம் டிக்கெட் வாங்குதல் அல்லது எங்கள் அலுவலகம் அல்லது முகவரிடமிருந்து டிக்கெட் வாங்குதல் போன்ற வழிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளை நீங்கள் பெறும்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம் என்பதைப் பற்றி இந்த தனியுரிமைக் கொள்கை தெரிவிக்கிறது, அதுமட்டுமின்றி உங்கள் தனியுரிமை சார்ந்த உரிமைகள் பற்றியும், சட்டம் உங்களை எப்படி பாதுகாக்கிறது என்பதைப் பற்றியும் கூறுகிறது.
இந்தத் தனியுரிமைக் கொள்கையானது சில அடுக்குகளைக் கொண்ட கட்டமைப்பில் வழங்கப்படுகிறது, ஆகவே கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகள் பற்றி நீங்கள் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். மாறாக, கொள்கையின் PDF பதிப்பை இங்கே நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளவும் செய்யலாம். SLAவின் சேவைகளைத் தொடர்ந்து பெற இந்தத் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படித்துப் புரிந்து கொண்டு ஏற்பதாக ஒப்புக் கொள்கிறீர்கள்.
வரையறைகள்
இந்தத் தனியுமைக் கொள்கையானது பல வரையறைகளைப் பயன்படுத்துகிறது, அவை பின்வருமாறு:
சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குதல்: எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குவதற்காக அவசியம் ஏற்படும்பட்சத்தில் உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குதல்.
நியாயமான நல நோக்கம்: உங்களுக்கு மிகச் சிறந்த சேவை/தயாரிப்பை வழங்குவதற்கும், மிகப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கும் எங்களுக்கு உதவிடும் வகையில் எங்கள் வணிகத்தை நடத்துதல் மற்றும் நிர்வகித்தலில் எங்களுக்கு உள்ள ஆர்வம். நியாயமான நல நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்டத் தரவை நாங்கள் செயலாக்குவதற்கு முன்பாக, சமநிலையின்மை அல்லது சாத்தியமுள்ள தாக்கங்கள் (நல்லவை கெட்டவை இரண்டும்) ஏதேனும் உங்களுக்கு ஏற்படுமா என்பதையும், உங்கள் உரிமைகள் பற்றியும் நாங்கள் கருத்தில் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். எங்களுடைய நல நோக்கங்களை விட உங்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தின் அளவு அதிகமாகும் பட்சத்தில் உங்களுடைய தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் (உங்களிடமிருந்து ஒப்புதல் பெறாதபட்சத்தில் அல்லது சட்டத்தின்படி அவசியமாகாத பட்சத்தில், அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்படாத பட்சத்தில்).
ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்: நீங்கள் ஒரு தரப்பினராக இருக்கின்ற ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு தேவையானபோது அல்லது அத்தகைய ஒப்பந்தத்திற்கு உடன்படும் முன்பு உங்கள் கோரிக்கையின்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குதல்.
தனிப்பட்ட தரவு: குறிப்பிட்ட தகவல்களில் இருந்து மட்டுமே அல்லது நாங்கள் வைத்திருக்கின்ற அல்லது அநேகமாக எங்களால் அணுகமுடியக்கூடிய பிற அடையாளம் காட்டிகளையும் சேர்த்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு தனிநபரை அடையாளம் காட்டக்கூடிய வகையிலான அல்லது அந்த நபரை பற்றிய தகவல்களை அடையாளம் காட்டக்கூடிய எந்த ஒரு தகவலும் தனிப்பட்டத் தகவலாகும். பெயரில்லாதத் தரவு அல்லது ஒரு நபரின் அடையாளம் நிரந்தரமாக அகற்றப்பட்ட தரவு போன்றவை தனிப்பட்ட தரவு என்பதில் அடங்காது.
செயாலக்குதல் அல்லது செயலாக்கம்: தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயல்கள். தரவைப் பெறுதல், பதிவு செய்தல், வைத்திருத்தல் அல்லது அத்தகைய தரவில் ஒழுங்கமைத்தல், திருத்தம் செய்தல், மீட்டெடுத்தல், பயன்படுத்துதல், வெளிப்படுத்துதல், அழித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்தல். தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்புதல் அல்லது பரிமாற்றம் செய்தலும் செயலாக்குதல் என்பதில் அடங்கும்.
தனிப்பட்ட தரவின் சிறப்பு வகைகள்: ஒரு நபரின் இனம் அல்லது பூர்வீகம், மத அல்லது தத்துவ நம்பிக்கை, பாலியல் வாழ்க்கை, பாலியல் நாட்டம், அரசியல் கருத்துகள், வர்த்தக சங்கத்தில் அவருடைய மெம்பர்ஷிப், உடல்நலம் அல்லது மரபியல் மற்றும் பயொமெட்ரிக் தரவு பற்றிய தகவல் போன்ற பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகின்ற தரவு.
முக்கியமான தகவல் மற்றும் நாங்கள் யார்
இந்தத் தனியுரிமைக் கொள்கையின் நோக்கம்
இந்த வலைத்தளம், குளோபல் காண்டாக்ட் சென்டர் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்துவது, விமான டிக்கெட்களை வாங்குவது போன்ற செயல்களின்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிச் சேகரிக்கிறோம், செயலாக்குகிறோம் என்பது பற்றியத் தகவலை வழங்குவதையே இந்தத் தனியுரிமைக் கொள்கை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள் விமான முன்பதிவை செய்யும்போது அல்லது முன்பதிவில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது, எங்களுடைய ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தில் சேரும்போது, ஒன்வோர்ல்ட் அலையன்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ள ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தில் பங்கேற்கும்போது, எங்களிடமிருந்து ஏதேனும் ஹாலிடே பேக்கேஜை வாங்கும்போது, எங்களிடமிருந்து ஏதேனும் பிற மதிப்புக் கூட்டுச் சேவைகளைப் பெறும்போது, எங்களுடைய செய்திமடலுக்குப் பதிவு செய்யும்போது நீங்கள் வழங்கக்கூடிய மற்ற தரவும் இதில் அடங்கும்.
இந்த வலைத்தளம் குழந்தைகளுக்கானது அல்ல, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் வழங்கினாலொழிய, குழந்தைகள் தொடர்பான தரவை நாங்கள் அறிந்தே சேகரிப்பதில்லை.
உங்களைப் பற்றிய தனிப்பட்டத் தரவை நாங்கள் சேகரிக்கும்போது அந்தந்த சமயங்களில் நாங்கள் வழங்குகின்ற மற்ற தனியுரிமை அறிவிப்பு அல்லது நியாயமான செயலாக்க அறிவிப்பு போன்றவற்றுடன் சேர்த்து இந்தத் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிக்க வேண்டியது முக்கியமாகும், அப்போதுதான் உங்கள் தரவை எப்படி, ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்துக் கொள்ள முடியும். இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, மற்ற அறிவிப்புகளுடன் சேர்த்து புரிந்து கொள்வதற்கானது, அவற்றுக்கு மாற்றானது அல்ல.
டேட்டா கன்ட்ரோலர்
எங்கள் பயணிகள், பணியாளர்கள், மூன்றாம் தரப்பின் தனிப்பட்ட தொடர்பு ஆகியோர் தொடர்பான அனைத்துத் தனிப்பட்ட தொடர்பு மற்றும் எங்களுடைய சொந்த வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பிற தனிப்பட்ட தரவு ஆகிய அனைத்திற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமே டேட்டா கன்ட்ரோலராக இருக்கிறது. அதாவது, தனிப்பட்ட தரவை எப்போது ஏன், எப்படிச் செயலாக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும், பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க நடைமுறைகளையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டிய பொறுப்பும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கே உள்ளது.
ஸ்ரீலங்கன் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாகும். ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிட்டெட், ஸ்ரீலங்கன் நிறுவனம் இரண்டும் சேர்த்து, மொத்தமாக குழுமம் என்று குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் (“GDPR”) நோக்கத்திற்காக, ஸ்ரீலங்கன் தனது மேற்பார்வை அமைப்பாக UK தகவல் ஆணையர் அலுவலகத்தை நியமித்துள்ளது. லண்டனில் உள்ள எங்கள் அலுவலகமே EU-இல், GDPR நோக்கங்களுக்கான பிரதிநிதியாகச் செயல்படும். இது 7வது தளம், ஒன் லேம்ப்ட்டன் சாலை, ஹான்ஸ்லோ, மிடில்செக்ஸ், TW3 1JB, யுனைட்டெட் கிங்டம் என்ற முகவரியில் உள்ளது.
இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, குழுமத்தின் சார்பாக வழங்கப்படுகிறது, இந்தத் தனியுரிமைக் கொள்கையில் “ஸ்ரீலங்கன்”, "நாங்கள்", "எங்கள்" அல்லது "எங்களுடைய" என்று நாங்கள் குறிப்பிடும்போது, குழுமத்தில் உள்ள, உங்கள் தரவைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான உரிய நிறுவனத்தையே நாங்கள் குறிப்பிடுகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் ஒரு சேவையை வாங்கும்போது, உங்கள் தரவிற்கு எந்த நிறுவனம் கண்ட்ரோலராக இருக்கும் என்பதை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். ஸ்ரீலங்கன் நிறுவனமே கண்ட்ரோலர் ஆகும், மேலும் இந்த வலைத்தளத்திற்கும் பொறுப்பாகும்.
தரவுப் பாதுகாப்பு அதிகாரி
இந்தத் தனியுரிமைக் கொள்கை தொடர்பான கேள்விகளைக் கவனித்துக் கொள்வதற்காக, ஸ்ரீலங்கன் நிறுவனம் ஒரு தரவுப் பாதுகாப்பு அதிகாரியை நியமித்துள்ளது. உங்கள் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள் உட்பட, இந்தத் தனியுரிமைக் கொள்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி DPO-ஐத் தொடர்பு கொள்ளுங்கள்:
தொடர்பு விவரங்கள்
- சட்டப்பூர்வத் தரப்பின் முழுப் பெயர்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிட்டெட்
- DPO-இன் பெயர் அல்லது தலைப்பு: தரவுப் பாதுகாப்பு அதிகாரி
- மின்னஞ்சல் முகவரி: privacy.office@srilankan.com
- அஞ்சல் முகவரி: ஏர்லைன் சென்டர்”, பண்டாரநாயகே சர்வதேச மையம், காட்டுநாயக்கே 11450, ஸ்ரீலங்கா.
- தொலைபேசி எண்: (0094) 19733 4488
- தொலைநகல் எண்: (0094) 19733 5588
மாற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய உங்கள் கடமை
உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு துல்லியமாகவும் நடப்பில் உள்ளதாகவும் இருக்க வேண்டியது முக்கியமாகும். எங்களிடம் நீங்கள் தொடர்பில் இருக்கும் வரை, உங்கள் தனிப்பட்ட தரவில் நிகழும் மாற்றங்களைப் பற்றி உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதும் உங்கள் கடமையாகும்.
மூன்றாம் தரப்பு இணைப்புகள்
இந்த வலைத்தளத்தில், மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள், ‘பிளக்-இன்’கள் மற்றும் செயலிகளுக்கான இணைப்புகள் இருக்கலாம். இவற்றை ஸ்ரீலங்கன் நிறுவனம் பராமரிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. அந்த இணைப்புகளைக் கிளிக் செய்வதால் அல்லது அந்த இணைப்புகளை இயக்குவதால், உங்களைப் பற்றிய தரவை மூன்றாம் தரப்பினர் சேகரிப்பதோ பகிர்வதோ சாத்தியமாகலாம். இந்த மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை, அவர்களின் தனியுரிமை அறிக்கைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து வெளியேறும்போது நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் உரிய தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தரவு
தனிப்பட்ட தரவு
நாங்கள் உங்களைப் பற்றிய பல்வேறு வகையான தனிப்பட்ட தரவைச் சேகரிக்கலாம் பயன்படுத்தலாம் சேமித்து வைக்கலாம் மற்றும் பரிமாற்றலாம். அவற்றை நாங்கள் பின்வருமாறு குழுப்படுத்துகிறோம்:
-
அடையாளத் தரவு: உங்கள் பாஸ்போர்ட் அல்லது பிற அடையாள ஆவணங்களில் இருந்து பெறக்கூடிய பெயரின் முற்பகுதி, பெயரின் நடுப்பகுதி, பெயரின் பிற்பகுதி, திருமணத்திற்கு முந்தைய பெயரின் பிற்பகுதி (பெண்களுக்கு), பயனர் பெயர் அல்லது அதுபோன்ற அடையாளங்காட்டிகள், திருமண நிலை, தலைப்பு, பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், ‘ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர்’ திட்ட மெம்பர்ஷிப் எண் ஆகியவை இதில் அடங்கும்.
-
முன்பதிவுத் தரவு: பயண விவரங்கள், விமான எண்கள், பயணத்திட்டம், இருக்கை மற்றும் உணவு தொடர்பான விருப்பத்தேர்வுகள், மதிப்புக் கூட்டுச் சேவைகளுக்காகச் செய்யப்பட்ட ஏதேனும் முன்பதிவுகள், உங்களுடன் பயணிப்பவர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
-
தொடர்புத் தரவு: மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மொபைல் எண், அஞ்சல் முகவரி, தலைநகல் எண் ஆகியவை இதில் அடங்கும்.
-
நிதித் தரவு: உங்கள் கார்டு எண், காலாவதித் தேதி, கார்டு உரிமைதாரர் பெயர், பில்லிங் முகவரி, பிற பில்லிங் தகவல்கள் உள்ளிட்ட கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் இதில் அடங்கும்.
-
பரிவர்த்தனைத் தரவு: நீங்கள் செய்த பேமெண்ட்டுகள் பற்றிய விவரங்கள், எங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய பிற சேவைகள் பற்றிய விவரங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
-
தொழில்நுட்பத் தரவு: இன்டர்நெட் புரோட்டோகால் (IP) அட்ரஸ், உங்கள் உள்நுழைவுத் தரவு, உலாவியின் வகை மற்றும் மதிப்பு, நேரமண்டல அமைப்பு மற்றும் இருப்பிடம், உலாவி பிளக்-இன் வகைகள் மற்றும் பதிப்புகள், இந்த வலைத்தளத்தை அணுக நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிளாட்ஃபார்ம், அவற்றில் உள்ள பிற தொழில்நுட்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
-
சுயவிவரத் தரவு: உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல், ‘ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர்’ மெம்பர்ஷிப் எண், நீங்கள் செய்துள்ள முன்பதிவுகள், உங்கள் ஆர்வங்கள், சேவை தொடர்பான உங்கள் விருப்பத்தேர்வுகள், நீங்கள் செல்லும் இடங்கள், உங்கள் கருத்து, கருத்துக்கணிப்புகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள் ஆகியவை இதில் அடங்கும்.
-
உபயோகத் தரவு: இந்த வலைத்தளத்தையும் சேவைகளையும் நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல் இதில் அடங்கும்.
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்புத் தரவு: எங்களிடம் இருந்தும் மூன்றாம் தரப்பினரிடம் இருந்தும் மார்க்கெட்டிங் செய்திகளைப் பெறுவது தொடர்பான உங்களுடைய விருப்பத்தேர்வுகள், தகவல்தொடர்புக்கான விருப்பத்தேர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட தரவு
அதோடு, நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அல்லது ஏதேனும் ஸ்ரீலங்கன் மொபைல் செயலிகளைப் பயன்படுத்தும்போது, ஒருங்கிணைக்கப்பட்ட, பெயர் அடையாளம் நீக்கப்பட்ட, புள்ளிவிவர அல்லது புவியியல் சார்ந்த தரவை (ஒருங்கிணைக்கப்பட்ட தரவு)). நாங்கள் சேகரிக்கவும், பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும், பகிரவும் செய்யலாம். ஒருங்கிணைக்கப்பட்ட தரவு என்பது உங்கள் தனிப்பட்ட தரவிலிருந்து பெறப்படுகிறது, ஆனால் உங்கள் அடையாளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தத் தரவு வெளிப்படுத்தாது என்பதால், சட்டத்தின்படி அது தனிப்பட்ட தரவாகக் கருதப்படுவதில்லை.
இந்த வலைத்தளத்தை நீங்கள் பார்வையிட்ட நேரம், எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்ற விவரம், இந்த வலைத்தளத்தில் எந்தெந்தப் பக்கங்களை நீங்கள் பார்வையிட்டீர்கள் என்ற விவரம், இந்த வலைத்தளத்திற்கு வருவதற்கு முன்பு எந்த வலைத்தளத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்பது பற்றிய விவரம் ஆகியவையும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தரவில் அடங்கலாம். உங்கள் இணையச் சேவை வழங்குநர் பெயரையும் நாங்கள் பதிவுசெய்யக்கூடும். வலைத்தளத்தின் செயல்பாடுகளை அளவிடுவதற்காகவும், எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கான யோசனைகளைப் பெறுவதற்காகவும் மட்டுமே இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.
உதாரணமாக, எங்கள் வலைத்தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அம்சத்தை எத்தனை சதவீத பயனர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக உங்கள் உபயோகத் தரவை நாங்கள் ஒருங்கிணைத்து ஆய்வு செய்யக்கூடும். இருப்பினும், உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடையாளப்படுத்தும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட தரவை உங்களுடைய தனிப்பட்ட தரவோடு நாங்கள் சேர்த்தால் அல்லது இணைத்தால், அப்படி சேர்க்கப்பட்ட தரவை நாங்கள் தனிப்பட்ட தரவாகவே கருதுவோம், மேலும் அது இந்தத் தனியுரிமைக் கொள்கையின்படியே பயன்படுத்தப்படும்.
தனிப்பட்ட தரவின் சிறப்பு வகைகள்
உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவின் குறிப்பிட்ட சில சிறப்பு வகைகளைச் சேகரிக்க வேண்டியது வணிகத்தின் ஒரு பகுதியாக அவசியமாகிறது. உதாரணமாக, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றோ, ஒரு பிரத்தியேக உபகரணம் தேவைப்படுகின்றபடியான உடல்நலப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்றோ அல்லது நகர்வதற்கு உங்களுக்கு உதவி தேவை என்றோ எங்களுக்கு நீங்கள் தெரிவித்தால் உங்கள் உடல்நிலை பற்றிய தரவை நாங்கள் சேகரிக்க வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளைத் தேர்வு செய்யும்போதும் உங்களுடைய மத நம்பிக்கைகள் அல்லது உடல்நிலை பற்றிய தரவைச் சேகரிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, உங்களுக்கு ஹலால் உணவு அல்லது நீரிழிவு நோயர்களுக்கான உணவு வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் இது தேவைப்படும்.
தனிப்பட்ட தரவின் சிறப்பு வகைகளின் பாதுகாப்பு தொடர்பான எங்கள் பொறுப்புகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அத்தகைய தரவை எங்களுக்கு நீங்கள் வழங்கும் ஒவ்வொரு முறையும், அவற்றைச் சேகரிக்க, செயலாக்க அல்லது பரிமாற்ற, எப்போதும் உங்களிடமிருந்து வெளிப்படையான சம்மதத்தை நாங்கள் கேட்போம்.
சிறார் பயணிகள் தொடர்பான தனிப்பட்ட தரவு
குறிப்பிட்ட சூழல்களில், சிறார் பயணிகள் (அதாவது, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்) தொடர்பான தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்க, செயலாக்க அல்லது பரிமாற்ற வேண்டிய இருக்கலாம். உதாரணமாக, ஒரு சிறார் பயணிக்காக விமானம் முன்பதிவு செய்யப்படும்போது இது தேவைப்படலாம். எங்கள் வணிகத்தை நடத்துவது தொடர்பான எங்களுடைய நியாயமான நல நோக்கத்தை அடைவதற்கும், பயண அனுமதிக்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கும் இது அவசியமாகிறது.
பத்தி 6-இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே சிறார் பயணிகள் தொடர்பான தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவோம். அது மட்டுமின்றி, சிறார் பயணிக்கான பெற்றோர்-பொறுப்பு வகிக்கின்ற நபரிடமிருந்து வெளிப்படையான ஒப்புதல் பெற்று மட்டுமே இந்தத் தரவைப் பயன்படுத்துவோம். தனிப்பட்ட தரவு தொடர்பாக மற்ற பயணிகளுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அதே உரிமைகள் சிறார் பயணிகளுக்கும் உள்ளன. இந்த உரிமைகள் பற்றி பத்தி 11-இல் விவரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தனிப்பட்ட தரவை வழங்கத் தவறினால்
சட்டத்தின்படி அல்லது உங்களுடன் எங்களுக்கு உள்ள ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி நாங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்க வேண்டியிருக்கும்போது, அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கு அந்தத் தகவல்கள் எங்களுக்குக் கட்டாயம் அவசியம் எனும்பட்சத்தில் அந்தத் தரவைக் கோரும்போது நீங்கள் வழங்கத் தவறினால், நாங்கள் உங்களுடன் செய்து கொண்டுள்ள அல்லது செய்ய முயற்சிக்கின்ற ஒப்பந்தத்தை எங்களால் செயல்படுத்த முடியாமல் போகக்கூடும். இதுபோன்ற சூழல்களில், நீங்கள் எதிர்பார்க்கும் சேவைகளை ரத்துசெய்ய அல்லது ஏற்க மறுக்க எங்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் அப்படி நாங்கள் செய்யும்போது உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்.
உங்கள் தனிப்பட்ட தரவு எப்படிச் சேகரிக்கப்படுகிறது?
உங்களைப் பற்றிய தரவைச் சேகரிக்க நாங்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறோம் அவற்றில் அடங்குபவை:
-
நேரடித் தொடர்புச் செயல்கள்: இணையவழிப் படிவங்களைப் பூர்த்திசெய்வதன் மூலம் அல்லது அஞ்சல், தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது பிற வழிகளில் எங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தரவை நீங்கள் (அல்லது உங்கள் சார்பாகச் செயல்படும் ஒரு முகவர்) எங்களுக்கு வழங்கலாம். பின்வரும் சமயங்களில் நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவும் இதில் அடங்கும்:
-
எங்களிடம் நீங்கள் விமானம் முன்பதிவு செய்யும்போது அல்லது பிற சேவைகளைப் பெறும்போது;
-
இந்த வலைத்தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கும்போது;
-
எங்களுடைய ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தில் நீங்கள் சேரும்போது;
-
எங்களிடம் இருந்து ஹாலிடே பேக்கேஜ்களை வாங்கும்போது;
-
எங்கள் செய்திமடல்களுக்குச் சந்தா சேரும்போது;
-
போட்டி, விளம்பரச் சலுகை, கருத்துக்கணிப்பு முதலியவற்றில் பங்கேற்கும்போது; அல்லது
-
உங்கள் கருத்தை எங்களுக்கு வழங்கும்போது;
-
எங்கள் சேவைகள் பற்றிப் புகாரளிக்கும்போது.
-
இந்த வலைத்தளம். நீங்கள் எங்கள் வலைத்தளத்தை அணுகும்போது, உங்கள் உபகரணம், உலாவல் செயல்பாடுகள், நீங்கள் பயன்படுத்தும் விதங்கள் பற்றிய தொழில்நுட்பத் தரவை நாங்கள் தானாகவே சேகரிக்கக்கூடும். குக்கீகள், சர்வர் பதிவுகள் மற்றும் அதுபோன்ற பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் இந்தத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கலாம். எங்கள் குக்கீகளைக் கொண்டுள்ள பிற வலைத்தளங்களை நீங்கள் பார்வையிட்டாலும் உங்களைப் பற்றிய தொழில்நுட்பத் தரவை நாங்கள் பெறக்கூடும். மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள பத்தி 6 மற்றும் எங்களுடைய
குக்கீ கொள்கையைப் பாருங்கள்.
-
எங்களது மொபைல் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகள். பயணிகள் பயன்படுத்துகின்ற சேவையில் சிறப்பாகச் சேவை அளிப்பதற்காக எங்கள் மொபைல் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகள் மொபைல் சாதனம் பற்றிய தகவல்களை அணுகக்கூடிய திறன் கொண்டவை. உங்கள் இருப்பிடத் தரவைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒப்புக் கொண்டுள்ள பட்சத்தில், மிகவும் பயனுள்ள வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை (உதாரணமாக, நீங்கள் தற்போதுள்ள இடத்தின் அடிப்படையில், புறப்பாடு பற்றிய தகவல்களை முன்பே உங்களுக்கு வழங்குதல்) உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் மொபைல் வலைத்தளம் மற்றும் மொபைல் செயல்களுக்காக உங்கள் இருப்பிடத் தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடும். உங்கள் இருப்பிடத் தரவை நாங்கள் சேகரிப்பதற்கு நீங்கள் வரம்பமைக்க விரும்பினால், உங்கள் சாதனத்தில் அதற்குரிய அமைப்பை தேவையானபடி மாற்றிக்கொள்ளவும்.
-
மூன்றாம் தரப்பினர் அல்லது பொதுவில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள். கீழே குறிப்பிட்டுள்ளவை போன்ற, மூன்றாம் தரப்பினர் மற்றும் பொதுத் தகவல் ஆதாரங்களில் இருந்தும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை நாங்கள் பெறக்கூடும்:
-
EU-க்கு வெளியே Google போன்ற பகுப்பாய்வுச் சேவை வழங்குநர்கள்;
-
EU-க்கு உள்ளே மற்றும்/அல்லது வெளியே அமைந்திருக்கும் விளம்பரச் சேவை நெட்வொர்க்குகள்;
-
EU-க்கு உள்ளே அல்லது வெளியே அமைந்திருக்கும் தேடல் தகவல் வழங்குநர்கள்;
-
EU-க்கு உள்ளே அல்லது வெளியே அமைந்திருக்கும், தொழில்நுட்ப அல்லது பேமெண்ட் சேவை வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் தொடர்பு, நிதி மற்றும் பரிவர்த்தனைத் தரவு; அல்லது
-
EU-க்கு உள்ளே அல்லது வெளியே அமைந்திருக்கும் டேட்டா புரோக்கர்கள் அல்லது அக்ரிகேட்டர்களிடம் இருந்து கிடைக்கும் அடையாளம் மற்றும் தொடர்புத் தரவு.
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்
சட்டம் அனுமதிக்கின்ற விதங்களில் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துவோம். பெரும்பாலும், உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்கும்போது பின்வரும் வகையான சட்ட அடிப்படைகளையே நாங்கள் சார்ந்து செயல்படுவோம்:
-
நியாயமான நல நோக்கம்: உங்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்கும், மிகச் சிறந்த மற்றும் மிகப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கும், எங்களுக்கு உதவிடும் வகையில் எங்கள் வணிகத்தை நடத்துதல் மற்றும் நிர்வகித்தலில் SriLankan நிறுவனத்திற்கு உள்ள ஆர்வம். எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதற்கு முன்பு, உங்கள் மீதும் உங்கள் உரிமைகளின் மீதும் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகளை (நல்லவை, கெட்டவை இரண்டும்) பற்றி நாங்கள் கருத்தில் கொண்டு அதில் ஒரு சமநிலையைப் பராமரிப்பதை உறுதி செய்து கொள்வோம்.
(உங்களிடமிருந்து நாங்கள் வெளிப்படையான ஒப்புதலைப் பெற்றால் அல்லது பிற வழிகளில் சட்டப்படி அவசியமானால் அல்லது அனுமதிக்கப்பட்டால் தவிர) எங்கள் நல நோக்கங்களை விட உங்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கம் அதிகமாக இருக்கும் வகையிலான செயல்களுக்கு உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பொறுத்தவரை, எங்கள் நியாயமான நல நோக்கங்களையும் உங்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கங்களையும் நாங்கள் எப்படி ஒப்பிட்டு மதிப்பீடு செய்கிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை, எங்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் பெறலாம்.
- ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்: நீங்கள் ஒரு தரப்பாக இருக்கின்ற பயண அனுமதிக்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு அல்லது அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முன்பு உங்கள் கோரிக்கையின் பெயரில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உங்கள் தரவைச் செயலாக்குவது அவசியமாகிறது.
- சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குதல்: நாங்கள் உட்படுகின்ற ஒரு சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குவதற்கு உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவது அவசியமாகலாம்.
- ஒப்புதல்: சில சூழல்களில், உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்க, செயலாக்க அல்லது பரிமாற்ற, உங்களிடம் நாங்கள் வெளிப்படையான ஒப்புதலைக் கேட்கக்கூடும். உதாரணமாக எங்கள் செய்திமடல் மற்றும் பிற நேரடி மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளுக்கு நீங்கள் சந்தா சேர்வது தொடர்பாக இது தேவைப்படலாம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த ஒப்புதலைத் திரும்பப் பெறலாம், அதற்கு எங்களைத் தொடர்புகொண்டு தெரிவித்தாலே போதும்.
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடிய நோக்கங்கள்
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான விதங்கள் பற்றிய விளக்கங்களை கீழே உள்ள அட்டவணையில் கொடுத்துள்ளோம், மேலும் எந்தச் சட்ட அடிப்படையில் அவ்வாறு செய்கிறோம் என்ற விவரத்தையும் கொடுத்துள்ளோம். இருப்பினும், இதுவே முழுமையான பட்டியல் அல்ல, நீங்கள் கோரினால் அது பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். தேவையான இடங்களில், எங்களுடைய நியாயமான நல நோக்கங்கள் எவை என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். உங்கள் தரவை நாங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்ற குறிப்பிட்ட நோக்கத்தைப் பொறுத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட சட்ட அடிப்படைகளில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்கக்கூடும்.
நோக்கம்/செயல்பாடு
|
தரவின் வகை
|
செயலாக்குவதற்கான சட்ட அடிப்படை
(உங்களுக்குச் சிறந்த சேவை அல்லது தயாரிப்பை வழங்குவது மற்றும் மிகச் சிறந்த மற்றும் மிகப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் நியாயமான நல நோக்கங்கள் உட்பட.)
|
எங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலியின் வழியாக ஒரு முன்பதிவை நிறைவு செய்வதில் ஒரு பயனராக உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால், சேவை மின்னஞ்சல்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். உதாரணமாக, நீங்கள் வாங்கியவற்றை செக்-அவுட் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று நினைவூட்டலை அனுப்புவோம். செயல்முறையின்போது நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய ஏதேனும் சிக்கல்களின் காரணமாக முன்பதிவை நிறைவு செய்வதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ளும்போது உங்களுக்கு உதவிடவே இதைச் செய்கிறோம்.
|
-
முன்பதிவுக் குறிப்பு
-
மின்னஞ்சல் முகவரி
-
பயணியின் பெயர்
-
முன்பதிவு செய்த நேரம்
-
புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம்
-
பயணத் தேதிகள்
|
எங்களிடம் இணைய வழியில் முன்பதிவு செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தானாக முன்வந்து நாங்கள் உதவுவதை உறுதி செய்து கொள்வதற்காகவே இந்தச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
|
உங்களை ஒரு புதிய கணக்குதாரராக அல்லது ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்திற்குப் பதிவு செய்ய:
|
-
அடையாளம்
-
தொடர்பு
|
எங்களுடைய நியாயமான நலன் நோக்கங்களுக்கு (எங்கள் வணிகத்தை நடத்துவதற்கு) அவசியம்
|
நீங்கள் மேற்கொள்ளும் முன்பதிவுகள் மற்றும் எங்கள் சேவைகள் தொடர்பாக நீங்கள் வைக்கும் ஏதேனும் பிற கோரிக்கைகளைச் செயலாக்குவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்கு:
-
பேமெண்ட்டுகள் மற்றும் கட்டணங்களை நிர்வகித்தல்
-
எங்களுக்கு வரவேண்டிய பணத்தை வசூலித்தல் மற்றும் மீட்டுப் பெறுதல்
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
நிதி
-
பரிவர்த்தனை
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்புகள்
|
-
உங்களுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (எங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதற்கு) அவசியம்
|
எங்களுடைய சரக்குப் போக்குவரத்துச் சேவைகளுக்கான முன்பதிவுகளைச் செயலாக்குதல் மற்றும் நிர்வகித்தல்
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
நிதி
-
பரிவர்த்தனை
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்புகள்
|
-
உங்களுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (எங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதற்கு) அவசியம்
|
நீங்கள் கூறும் ஏதேனும் பிரத்தியேக உதவிகளை ஏற்பாடு செய்தல் அல்லது ஏதேனும் பிரத்தியேக மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்தல் (இதற்கு எங்களுடைய மூன்றாம் தரப்பு சப்ளையர்களுக்கு தரவை நாங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்)
|
-
அடையாளம்
-
சிறப்பு வகைகள்
|
-
உங்களுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (நீங்கள் உங்கள் விமானத்தில் ஏறுவதற்கும், பயணப் பாதுகாப்பிற்கும் நாங்கள் உதவுவதற்கு) அவசியம்
-
முன்பதிவுச் செயல்முறையின்போது வெளிப்படையாக ஒப்புதல் கோரப்படும்
|
நீங்கள் தேர்வு செய்யும் உணவுகளை ஏற்பாடு செய்தல் (இது உங்களுடைய மத நம்பிக்கைகள் அல்லது உடல்நிலை பற்றி தெரிவிக்கலாம், மேலும் எங்களுடைய மூன்றாம் தரப்பு சப்ளையர்களுக்கு தரவை நாங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்)
|
-
அடையாளம்
-
பிரத்தியேக வகைகள்
|
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (நீங்கள் உங்கள் விமானத்தில் ஏறுவதற்கும், பயணப் பாதுகாப்பிற்கும் நாங்கள் உதவுவதற்கு) அவசியம்
-
முன்பதிவுச் செயல்முறையின்போது வெளிப்படையாக ஒப்புதல் கோரப்படும்
|
பின்வருபவை உட்பட உங்களுடனான எங்கள் உறவை நிர்வகிப்பதற்கு:
-
பயண அனுமதிக்கான எங்களுடைய நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை அல்லது பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதைப்பற்றி உங்களுக்குத் தெரிவித்தல்
-
கருத்து வழங்குமாறு அல்லது கருத்துக்கணிப்பில் பங்கேற்குமாறு உங்களைக் கோருதல்
-
உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தைத் தனிப்பயனாக்குதல்
-
எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல்
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
சுயவிவரம்
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்புகள்
|
-
உங்களுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்
-
சட்டப்படியான கடமைக்கு இணங்குவதற்கு அவசியம்
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (எங்கள் பதிவுகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்வதற்கு மற்றும் எங்கள் சேவைகளை பயணிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு செய்வதற்கு) அவசியம்
-
உங்களுக்குச் சரியான வகைத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக, எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம்.
-
எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம்.
|
குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டம் அல்லது போட்டியில் கலந்து கொள்வது அல்லது கருத்துக்கணிப்பில் பங்கேற்பது போன்றவற்றை நீங்கள் செய்வதற்கு.
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
சுயவிவரம்
-
பயன்பாடு
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்புகள்
|
-
உங்களுடன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்
-
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (எங்கள் சேவைகளை பயணிகள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு செய்வதற்கு) அவசியம்
|
எங்கள் வழிகாட்டுதல் இந்த வலைத்தளத்தையும் நிர்வகிப்பதற்கு மற்றும் பாதுகாப்பதற்கு (சிக்கல் தீர்த்தல், தரவுப் பகுப்பாய்வு, சோதனை செய்தல், சிஸ்டம் பராமரிப்பு, உதவி தேவை, அறிக்கை அளித்தல், தரவை ஹோஸ்ட் செய்தல் முதலியவை உட்பட)
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
தொழில்நுட்பம்
|
-
எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம் (எங்கள் வணிகத்தை நடத்துவதற்கு, நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பை வழங்குவதற்கு, மோசடிகளைத் தடுப்பதற்கு, வணிகத்தை மறு ஒழுங்கமைவு செய்தல் அல்லது மறு கட்டமைப்பு செய்தல் சார்ந்த பயிற்சிகளை நடத்துவதற்கு)
-
சட்டப்பூர்வக் கடமைக்கு இணங்குவதற்கு அவசியம்
|
உங்களுக்குத் தொடர்புடைய வலைத்தள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை வழங்குவதற்கு அல்லது உங்களுக்கு நாங்கள் வழங்கும் விளம்பரங்களின் பயனுள்ள தன்மையை அளவிடுவதற்கு அல்லது புரிந்து கொள்வதற்கு.
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
சுயவிவரம்
-
பயன்பாடு
-
மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்பு
-
தொழில்நுட்பம்
|
எங்களுடைய நியாயமான நல நோக்கங்களுக்கு (எங்கள் சேவைகளை பயணிகள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு செய்வதற்கு, அவற்றை மேம்படுத்துவதற்கு, எங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு மற்றும் எங்கள் மார்க்கெட்டிங் உத்தியைத் தெரிவிப்பதற்கு) அவசியம்
|
எங்கள் தேவைகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
நிதி
-
பரிவர்த்தனை
-
சுயவிவரம்
|
பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ வணிகத்தை நாங்கள் நடத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை எங்களுக்கு இருக்கும் பட்சத்தில், அதன்படி வணிகத்தை நடத்துவதற்கான எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம்
|
இந்த வலைத்தளம், சேவைகள், மார்க்கெட்டிங், பயணிகள் உறவுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகத் தரவுப் பகுப்பாய்வு நிபுணர்களைப் பயன்படுத்துவதற்கு
|
-
தொழில்நுட்பம்
-
பயன்பாடு
|
எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம் (எங்கள் சேவைகளுக்கான பயணிகளின் வகைகளை வரையறுப்பதற்கு, இந்த வலைத்தளத்தைப் புதுப்பித்த நிலையிலும் தொடர்புடைய உள்ளடக்கத்துடனும் பராமரிப்பதற்கு, எங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் எங்கள் மார்க்கெட்டிங் உத்தியைத் தெரிவிப்பதற்கு)
|
உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கின்ற சேவைகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை உங்களுக்கு வழங்குவதற்கு
|
-
அடையாளம்
-
தொடர்பு
-
தொழில்நுட்பம்
-
பயன்பாடு
-
சுயவிவரம்
|
எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம் (எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் வணிகத்தை வளர்ப்பதற்கு)
|
உங்கள் பணி விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கு
|
- அடையாளம்
- தொடர்பு
- பணி விண்ணப்பம்
|
புதிய பணியாளர்கள் அல்லது ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு, எங்கள் நியாயமான நல நோக்கங்களுக்கு அவசியம்
|
குக்கீகள்
தளத்தின் செயல்பாடுகளை அளவிடுவதற்கும், எங்கள் சேவைகளைத் தேடும் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. குக்கீகள் என்பவை, நீங்கள் வலைத்தளங்களையும் இணையச் சேவைகளையும் அணுகும்போது உங்கள் கணினிக்கு அனுப்பப்படுகின்ற எண்ணெழுத்து உள்ளடக்கம் கொண்ட அடையாளங்காட்டிகள் ஆகும். குக்கீகளை ஏற்கும் வகையில் உங்கள் வலை உலாவியின் விருப்பத்தேர்வுகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை உங்கள் கணினியின் ஹார்ட் டிரைவில் சேமிக்கப்படும். உங்கள் விருப்பத்தேர்வுகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும், ஏற்ற உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்கும் குக்கீகள் எங்களுக்கும் எங்கள் வலைத்தளங்களுக்கும் உதவுகின்றன.
உலாவிகள் குக்கீகளின் சிலவற்றை மட்டும் அல்லது அனைத்து குக்கீகளையும் நிராகரிக்குமாறு அல்லது வலைத்தளங்கள் அணுகல் குக்கீகளை அமைக்கும்போது அல்லது அணுகும்போது அறிவிப்பை அனுப்பும் வகையில் உங்கள் உலாவின் அமைப்புகளை நீங்கள் மாற்ற முடியும். நீங்கள் குக்கீகளை முடக்கினால் அல்லது நிராகரித்தால், இந்த வலைத்தளத்தின் சில பகுதிகள் அணுக முடியாமல் போகலாம் அல்லது சரியாக வேலை செய்யாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குக்கீகள் பற்றிய மேலும் தகவலுக்கு எங்கள்
குக்கீ கொள்கையைப் பாருங்கள்.
நோக்கத்தின் மாற்றம்
உங்கள் தனிப்பட்ட தரவை பிற காரணத்திற்காக நாங்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும், எங்கள் அசல் நோக்கத்துடன் அந்தக் காரணம் இணக்கமானதாக இருக்கிறது என்றும் நாங்கள் கருதினால் தவிர, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எந்த நோக்கங்களுக்காகச் சேகரித்தோமோ அந்த நோக்கங்களுக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவோம். புதிய நோக்கத்திற்காகச் செயலாக்குவது, அசல் நோக்கத்துடன் எப்படி இணக்கமாக இருக்கிறது என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பெற விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பற்ற ஒரு நோக்கத்திற்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தால், நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தெரிவிப்போம், அதோடு நாங்கள் அப்படிச் செய்ய எங்களை அனுமதிக்கின்ற சட்டப்பூர்வ அடிப்படைக் காரணங்களையும் விளக்குவோம்.
மார்க்கெட்டிங்
குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவு உபயோகங்கள் தொடர்பாக உங்களுக்குத் தெரிவுகளை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், குறிப்பாக மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்பானவற்றில்.
எங்களிடமிருந்து வழங்கப்படும் விளம்பரச் சலுகைகள்
உங்களுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன தேவை அல்லது உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கும் என்பது பற்றி எல்லாம் நாங்கள் கருதுவதற்குத் தேவையான ஓர் அடிப்படைக் கருத்தாக்கத்தைப் பெறுவதற்காக உங்கள் அடையாளம், தொடர்பு, தொழில்நுட்பம், உபயோகம், சுயவிவரம் ஆகியவற்றின் தரவுகளை நாங்கள் பயன்படுத்தக்கூடும். எந்தெந்த சேவைகள் மற்றும் சலுகைகள் உங்களுக்குத் தொடர்புடையவையாக இருக்கும் என்பதை நாங்கள் இப்படித்தான் தீர்மானிக்கிறோம் (இதைத்தான் நாங்கள் மார்க்கெட்டிங் என்று குறிப்பிடுகிறோம்).
“சாஃப்ட் சம்மதம்”
எதிர்காலத்தில் மார்க்கெட்டிங் தகவல் தொடர்புகளைப் பெறுவதில் இருந்து நீங்கள் விலகியிருக்காத பட்சத்தில், கடந்த காலத்தில் நீங்கள் விமானங்களை முன்பதிவு செய்திருந்தால் அல்லது எங்களிடமிருந்து பிற சேவைகளை வாங்கியிருந்தால் அல்லது சாத்தியமுள்ள முன்பதிவு அல்லது பர்ச்சேஸ் தொடர்பாக எங்களிடமிருந்து நீங்கள் ஏதேனும் தகவல் கேட்டிருந்தால் மார்க்கெட்டிங் தகவல் தொடர்புகளை எங்களிடமிருந்து நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.
மூன்றாம் தரப்பு மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக, குடும்பத்திற்கு வெளியே இருக்கும் எந்தவொரு நிறுவனத்துடனும் உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்வதற்கு முன்பு, உங்களிடமிருந்து நாங்கள் வெளிப்படையான ஒப்புதலைக் கோருவோம்.
விலகுதல்
எப்போது விரும்பினாலும் நீங்கள் விளம்பர மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான உங்கள் ஒப்புதலை ரத்துசெய்யலாம். அந்த மின்னஞ்சலில் இருக்கின்ற குழுவிலகுவதற்கான இணைப்பைக் கிளிக் செய்து அல்லது எங்களிடம் நீங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட கணக்கில் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம்.
சட்டத்தின்படி அவசியப்பட்டால் அல்லது அனுமதிக்கப்பட்டால், மேலே வழங்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க உங்கள் தனிப்பட்ட தரவை உங்களுக்குத் தெரியாமலோ உங்கள் ஒப்புதல் இல்லாமலோ கூட நாங்கள் செயலாக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துதல்
மேலே உள்ள பத்தி 5, 6 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, உங்கள் தனிப்பட்ட தரவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள தரப்புகளுடன் நாங்கள் பகிரக்கூடும்.
உட்புற மூன்றாம் தரப்பினர்
குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்கள், ஜாயின்ட் கண்ட்ரோலர்கள் அல்லது பிராஸசர்களாகச் செயல்படுகின்ற, ஸ்ரீலங்கா மற்றும் பிற நாடுகளில் அமைந்துள்ள அவுட்ஸ்டேஷன்கள், கிளைகள் மற்றும் அலுவலகங்கள்.
வெளிப்புற மூன்றாம் தரப்பினர்
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் வணிகச் செயல்பாடுகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு ஹோட்டல்கள், காப்பீட்டு பேக்கேஜ்கள், விமானத்தில் சுங்கவரியற்ற பொருட்கள், உதவி மையங்கள், தரவுச் செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வுகள், மார்க்கெட்டிங் மற்றும் ஆராய்ச்சி, லிமோசின் சேவைகள், விநியோகம், வருவாய் மேம்படுத்தல், பேமெண்ட் மற்றும் பிற சேவைகளை வழங்குகின்ற, பிராஸசர்களாகச் செயல்படுகின்ற சேவை வழங்குநர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முகவர்கள்.
-
கோடு-ஷேர் பார்ட்னர்கள், கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், ஸ்ரீலங்கன் உறுப்பினராக இருக்கக்கூடிய ஏதேனும் விமான சேவை நிறுவன அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் போன்ற ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் வணிகக் கூட்டாளர்கள்.
-
்ரீலங்கன் நிறுவனத்தின் ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தின் பார்ட்னர்களுடன்
-
பிற பார்ட்னர் விமானச் சேவை நிறுவனங்களின் ஆப்பரேட்டர்களின் ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டங்களுடன்.
-
ஆலோசனை, வங்கிச் சேவை, சட்ட ஆலோசனை, காப்பீடு மற்றும் கணக்குப்பதிவுச் சேவைகளை வழங்குகின்ற வழக்கறிஞர்கள், வங்கிகள், தணிக்கையாளர்கள், காப்பீட்டு வழங்குநர்கள் போன்ற பிராஸசர்கள் அல்லது ஜாயின்ட் கண்ட்ரோலர்களாகச் செயல்படுகின்ற தொழில்முறை ஆலோசகர்கள்.
-
இண்டர்நெட் பேமெண்ட் கேட்வே சேவை வழங்குநர்கள், வங்கிகள், கிரெடிட்/டெபிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதிச் சேவை வழங்குநர்களுடன்.
-
பாதுகாப்பு, சுங்கம், குடிப்பெயர்வு அல்லது பிற விசாரணை நோக்கங்களுக்காக, சட்ட அமலாக்க அதிகாரி அல்லது பாதுகாப்புக்கான அரசாங்க நிறுவனத்துடன்.
-
சில சூழ்நிலைகளில் செயலாக்கச் செயல்பாடுகள் பற்றி அறிக்கை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற, பிராஸசர்கள் அல்லது ஜாயின்ட் கண்ட்ரோலர்களாகச் செயல்படுகின்ற, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள்.
-
வணிகத்தின் ஒரு பகுதியை அல்லது எங்கள் சொத்துக்களை நாங்கள் விற்பனை செய்ய, உரிமை மாற்றம் செய்ய அல்லது ஒன்றிணைக்கத் தேர்வு செய்கின்ற மூன்றாம் தரப்பினர். மாற்றாக, நாங்கள் பிற வணிகங்களைக் கையகப்படுத்த அல்லது அவர்களுடன் ஒன்றிணைக்க முயற்சி செய்யலாம். எங்கள் வணிகத்தில் மாற்றம் ஏற்பட்டால், இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள அதே வழியில் மட்டுமே புதிய உரிமையாளர்களும் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவார்கள்.
தனிப்பட்ட தரவின் பாதுகாப்பை மதிப்பதும், சட்டத்திற்கு இணங்க அதைக் கையாள்வதும் அவசியம் என்று நாங்கள் மூன்றாம் தரப்பினர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மூன்றாம் தரப்பினர் தங்களது சொந்த நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, மேலும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவும் எங்கள் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்க நாங்கள் அனுமதிக்கிறோம்.
சர்வதேசப் பரிமாற்றங்கள்
உட்புறப் பரிமாற்றங்கள்
ஸ்ரீலங்கன் நிறுவனம் என்பது பல்வேறு சட்ட அதிகார எல்லைகளில் செயல்படுகின்ற வணிகரீதியான சர்வதேச விமான நிறுவனமாகும். நாங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே உள்ள பகுதிகளுக்கும் உங்கள் தரவைப் பரிமாற்றம் செய்வது அவசியமாகும்.
வெளிப்புறப் பரிமாற்றங்கள்
எங்கள் வெளிப்புற மூன்றாம் தரப்பினர்களில் பலர் EEAக்கு வெளியே உள்ளவர்கள், ஆகவே உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதில் உங்கள் தரவை EEAக்கு வெளியே பரிமாற்றம் செய்வதும் உள்ளடங்கும்.
EEAக்கு வெளியே உள்ள மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பரிமாற்றும்போதெல்லாம், பின்வரும் பாதுகாப்பு அம்சங்களில் குறைந்தபட்சம் ஒன்றாவது செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம், எங்களிடம் கிடைக்கும் அதே அளவு பாதுகாப்பை மூன்றாம் தரப்பினரும் வழங்குவதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்:
-
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பரிமாற்றம் செய்கின்ற சில குறிப்பிட்ட EEA அல்லாத சில நாடுகள், போதுமான அளவு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய ஆணையம்:
EU அல்லாத நாடுகளில் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பிற்கான போதுமான அளவு என்பதை பார்க்கவும்.
-
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்றாம் தரப்புச் சேவை வழங்குனர்களை நாங்கள் பயன்படுத்தும்போது, அவர்கள் EU-US பிரைவசி ஷீல்ட் ஒப்பந்தத்தின் அங்கத்தினர்களாக இருந்தால் அவர்களிடம் தரவை நாங்கள் பரிமாற்றக்கூடும். இந்த ஒப்பந்தமானது ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பகிரப்படும் தனிப்பட்ட இதேபோன்ற பாதுகாப்பை வழங்குவதை அவசியமாக்குகிறது. மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய ஆணையம்:
EU-US பிரைவசி ஷீல்ட் என்பதைப் பார்க்கவும்.
-
EEA அல்லது அமெரிக்காவிற்கு வெளியே உள்ள குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களை நாங்கள் பயன்படுத்தினால், ஐரோப்பாவில் வழங்கப்படுவதைப் போன்ற அதே பாதுகாப்பை தனிப்பட்ட அளவிற்கு வழங்குகின்ற, ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள குறிப்பிட்ட ஒப்பந்தங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய ஆணையம்:
மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு தனிப்பட்ட தரவைப் பரிமாற்றுவதற்கான மாதிரி ஒப்பந்தங்கள்.
EEAக்கு வெளியே உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பரிமாற்றுவதற்குப் பயன்படுத்துகின்ற குறிப்பிட்ட சில முறைகள் பற்றி உங்களுக்கு மேலும் தகவல் வேண்டுமென்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தரவுப் பாதுகாப்பு
உங்கள் தனிப்பட்ட தரவு தற்செயலாக இழக்கப்படுதல், அங்கீகரிக்கப்படாத வழியில் பயன்படுத்தப்படுதல் அல்லது அணுகப்படுதல், மாற்றப்படுதல் அல்லது வெளிப்படுத்தப்படுதல் போன்றவற்றைத் தடுப்பதற்குத் தேவையான தகுந்த பாதுகாப்பு அம்சங்களையும் நடவடிக்கைகளையும் நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, வணிகத்தின் செயல்பாட்டிற்குக் கண்டிப்பாகத் தேவைப்படுகின்ற பணியாளர்கள், முகவர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவிற்கான அணுகல் கிடைக்கும்படி நாங்கள் வரம்புகளை அமைத்துப் பின்பற்றுகிறோம். நாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கினால் மட்டுமே அவர்கள் உங்களுடைய தனிப்பட்ட தரவைச் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் வேலையில் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் பொறுப்பிற்கு உட்பட்டிருப்பார்கள்.
தனிப்பட்ட தரவு மீறல் நடந்துள்ளது என்று சந்தேகிக்கும் படியான நிகழ்வுகளைக் கையாள்வதற்குத் தேவையான செயல்முறைகளை நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம், மேலும் அதுபற்றி உங்களுக்கும், சட்டப்படி அவசியம் எனும் பட்சத்தில் அந்த மீறல்கள் தொடர்பான ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தெரிவிப்போம்.
தரவைத் தக்கவைத்தல்
என்னுடைய தனிப்பட்ட தரவை நீங்கள் எவ்வளவு நாட்கள் பயன்படுத்துவீர்கள்?
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எந்த நோக்கங்களுக்காகச் சேகரித்தோமோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான காலம் வரை மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் வைத்திருப்போம். ஏதேனும் சட்டப்பூர்வ, கணக்குப்பதிவு சார்ந்த அல்லது அறிக்கை வெளியிடுதல் தேவைகள் போன்றவற்றை நிறைவேற்றும் நோக்கங்களும் இதில் அடங்கும். பொருந்தக்கூடிய உள்நாட்டுச் சட்டங்களுக்கு நாங்கள் இணங்குவதற்காக, உங்கள் தனிப்பட்ட தரவைப் பெற்றதில் இருந்து 12 ஆண்டு காலம் வரை உங்கள் தரவை நாங்கள் சேமித்து வைத்திருக்கக்கூடும்.
தனிப்பட்ட தரவிற்கான தகுந்த தக்கவைப்புக் காலத்தைத் தீர்மானிப்பதற்கு, தனிப்பட்ட தரவின் அளவு, இயல்பு மற்றும் முக்கியத்தன்மை, உங்கள் தனிப்பட்ட தரவின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது வெளிப்படுத்தல் காரணமாக ஏற்படச் சாத்தியமுள்ள ஆபத்து, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதற்கான நோக்கங்கள், அந்த நோக்கங்களை நாங்கள் பிற வழிகளில் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா முடியாதா என்பது, பொருந்தக்கூடிய சட்டப்பூர்வத் தேவைப்பாடுகள் ஆகிய அனைத்து அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.
சில சூழ்நிலைகளில் உங்கள் தரவை நீக்கிவிடுமாறு எங்களிடம் நீங்கள் கேட்கலாம்: மேலும் தகவலுக்கு கீழே உள்ள பத்தி 11-இல் உள்ள ‘அழிக்கக் கோருதல்’ என்ற பகுதியைப் பார்க்கவும்.
சில சூழ்நிலைகளில் ஆராய்ச்சி அல்லது புள்ளிவிவரம் சார்ந்த நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பெயர் அடையாளம் நீக்கிப் பயன்படுத்தக்கூடும் (இப்படிச் செய்வதன் மூலம் அந்தத் தரவு உங்களுடன் தொடர்புடையதாக இருக்காது, ஆகவே அதைக் கொண்டு உங்களை அடையாளம் காணவும் முடியாது). அப்படிச் செய்யும்போது மேலும் உங்களுக்கு அறிவிப்பு எதுவும் வழங்காமல் காலவரையின்றி நாங்கள் அந்தத் தகவலைப் பயன்படுத்தக்கூடும்.
உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள்
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ், உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்களுக்கு இந்த உரிமைகள் உள்ளன:
-
உங்கள் தனிப்பட்ட தரவிற்கான அணுகலைக் கோருதல் (பொதுவாக “டேட்டா சப்ஜெக்ட் அணுகல் கோரிக்கை” என்று அழைக்கப்படுகிறது). இதன்மூலம் உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கின்ற தனிப்பட்ட தரவின் ஒரு நகலை நீங்கள் பெற முடியும், அதை நாங்கள் சட்டப்படி தான் செயலாக்குகிறோமா என்று சரிபார்க்கவும் முடியும்.
-
உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவில் திருத்தங்கள் செய்யக் கோருதல். . உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கிற முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தரவைத் திருத்துவதற்கு இது உதவுகிறது. இருப்பினும் நீங்கள் எங்களுக்கு வழங்குகின்ற புதிய தரவின் துல்லியத்தன்மையை நாங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.
-
உங்கள் தனிப்பட்ட தரவை அழிக்கக் கோருதல். நாங்கள் இனியும் உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதைத் தொடர்வதற்கு நியாயமான காரணம் ஏதுமில்லை என்ற பட்சத்தில் அந்தத் தரவை நீக்கிவிடுமாறு அல்லது அகற்றி விடுமாறு எங்களைக் கேட்க இது உதவுகிறது. உங்கள் தகவல்களை நாங்கள் சட்டவிரோதமாகச் செயலாக்கிவிட்டால் அல்லது உள்ளூர் சட்டத்திற்கு இணங்க, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தரவைச் செயலாக்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கான உங்கள் உரிமையை நீங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட தரவை நீக்கிவிடுமாறு அல்லது அகற்றி விடுமாறு எங்களிடம் கேட்கவும் உங்களுக்கு உரிமை உள்ளது. எனினும், இதையும் நினைவில் கொள்ளவும்: உங்கள் தனிப்பட்ட தரவை நீக்கிவிடுமாறு நீங்கள் கோரும்போது, குறிப்பிட்ட ஏதேனும் சட்டப்பூர்வக் காரணங்களினால், தரவை அழிப்பதற்கான உங்கள் கோரிக்கைக்கு எங்களால் சில சமயம் இணங்க முடியாமல் போகக்கூடும், அதுபோன்ற சமயங்களில் பொருந்தினால், உங்களுக்குத் தெரிவிப்போம்.
-
நாங்கள் நியாயமான நல நோக்கத்தைச் சார்ந்தே உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம், எனினும் உங்கள் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையின் காரணமாக, உங்கள் தரவை நாங்கள் செயலாக்குவது உங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் கருதினால், அந்தச் சூழ்நிலையின் தன்மையின் அடிப்படையில் நீங்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டியிருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்தல். நேரடி மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்கும்போது அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. சில சந்தர்ப்பங்களில், உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கு எங்களிடம் வலுவான நியாயமான அடிப்படைக் காரணங்கள் உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்கிக் கூறலாம், அதுபோன்ற சமயங்களில் உங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைவிட எங்கள் காரணம் மேலோங்கியதாகக் கருதப்படும்.
-
உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு வரம்பைக் கோருதல். பின்வரும் சூழ்நிலைகளில், உங்கள் தனிப்பட்ட தரவைச் செய்லாக்குவதை நாங்கள் இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டுக்கொள்ள இது உதவுகிறது: நீங்கள் தரவின் துல்லியத்தை சரிசெய்ய வேண்டி இருக்கிறது; (b) உங்கள் தரவை நாங்கள் பயன்படுத்துவது சட்டவிரோதம், ஆனால் நாங்கள் அதை அழிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லை; (c) சட்டப்பூர்வ உரிமை கோரல்களை நீங்கள் மேற்கொள்வதற்கு, செயல்படுத்துவதற்கு அல்லது அவற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு, இனியும் உங்கள் தரவை வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லாத பட்சத்திலும் தரவை நாங்களே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்; அல்லது (d) உங்கள் தரவை நாங்கள் பயன்படுத்துவதற்கு நீங்கள் ஆட்சேபம் தெரிவித்து விட்டீர்கள், ஆனாலும் அதைப் பயன்படுத்துவதற்கு எங்களிடம் இன்னும் வலுவான நியாயமான காரண அடிப்படைகள் உள்ளதா என்று நாங்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது.
-
உங்கள் தனிப்பட்ட தரவை உங்களுக்கு அல்லது ஒரு மூன்றாம் தரப்பினருக்குப் பரிமாற்றம் செய்யக் கோருதல். உங்களுக்கு அல்லது நீங்கள் தேர்வு செய்யும் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு, கட்டமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, சாதனங்களால் வாசிக்க முடிகின்ற வடிவத்தில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் வழங்குவோம். நாங்கள் பயன்படுத்துவதற்கு நீங்கள் ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்த தானியங்குத் தகவல்களுக்கு அல்லது உங்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் பயன்படுத்திய தகவல்களுக்கு மட்டுமே இந்த உரிமை பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு உங்களிடம் நாங்கள் ஒப்புதல் பெற வேண்டியிருக்கும் பட்சத்தில் அத்தகைய ஒப்புதலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். எனினும், உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறுவதற்கு முன்பு நாங்கள் செய்து முடித்த செயலாக்கத்தின் சட்டப்பூர்வத்தன்மையை இது பாதிக்காது. நீங்கள் ஒப்புதலை திரும்பப் பெற்றால் குறிப்பிட்ட சில சேவைகளை உங்களுக்கு எங்களால் வழங்க முடியாமல் போகலாம். இப்படி நடக்கும் எனும் பட்சத்தில், நீங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறும்போது அது பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் எதையேனும் நீங்கள் பயன்படுத்த நினைத்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பொதுவாகக் கட்டணம் எதுவும் தேவைப்படாது
உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுவதற்கு (அல்லது பிற உரிமைகள் எதையும் பயன்படுத்த) நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனினும், உங்கள் கோரிக்கை முற்றிலும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாதபட்சத்தில், மீண்டும் மீண்டும் மறுமுறை கோரப்படுவதாக இருந்தால் அல்லது மிக அதிகமாக இருந்தால் அதற்கு நாங்கள் நியாயமான ஒரு கட்டணத்தை வசூலிக்கலாம். மாற்றாக, இத்தகைய சூழ்நிலைகளில் உங்களுடைய கோரிக்கைக்கு நாங்கள் இணங்க மறுக்கலாம்.
உங்களிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்ப்போம்
உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுவதற்கு (அல்லது உங்களது பிற உரிமைகள் எதையும் பயன்படுத்துவதற்கு) உங்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், குறிப்பிட்ட சில தகவல்களை உங்களிடம் இருந்து நாங்கள் கேட்கலாம். இது, தனிப்பட்ட தரவைப் பெற உரிமையில்லாத எந்த ஒரு நபருக்கும் அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பாதுகாப்பு வழிமுறையாகும். உங்கள் கோரிக்கையை நாங்கள் செயல்படுத்தும் வேகத்தை அதிகரிப்பதற்காக, உங்கள் கோரிக்கை தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்காக உங்களை நாங்கள் தொடர்பு கொள்ளக்கூடும்.
பதில் அளிப்பதற்கான கால வரம்பு
நியாயமான கோரிக்கைகள் அனைத்திற்கும் நாங்கள் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க முயற்சிப்போம். உங்கள் கோரிக்கை மிக சிக்கலானதாக இருந்தால் அல்லது நீங்கள் அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளைச் சமர்ப்பித்து இருந்தால், சில சமயங்களில் எங்களுக்கு ஒரு மாதத்தை விட அதிக காலம் ஆகலாம். அப்படி அதிக காலமானால், அதைப்பற்றி உங்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிப்போம்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்
ஸ்ரீலங்கன் நிறுவனம், பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் பொருந்தும் முறைகளுக்கு இணங்க அவ்வப்போது இந்த தனியுரிமைக் கொள்கையில் திருத்தங்கள் செய்யும், புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும். தனியுரிமைக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள அவ்வப்போது இந்த வலைத்தளத்திற்கு வந்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனியுரிமைக் கொள்கையின் கடந்த காலப் பதிப்புகளை, எங்களைத் தொடர்பு கொண்டு பெற முடியும்.
தனியுரிமைக் கொள்கையானது பழமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம், பதிப்புகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தால், ஆங்கிலப் பதிப்பே செல்லுபடியானதாகக் கருதப்படும்.
புகார்கள்
இந்தத் தனியுரிமைக் கொள்கையின் உள்ளடக்கம் தொடர்பாக உங்களுக்குக் கருத்துக்கள், கேள்விகள், குறைகள் ஏதேனும் இருந்தால், முதல் நிகழ்விலேயே உங்கள் குறையைத் தீர்ப்பதற்கு எங்களால் உதவ முடிகிறதா என்பதைப் பார்ப்பதற்காக எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.