ஓப்பந்தத்துக்கான நிபந்தனைகள்

ஓப்பந்தத்துக்கான நிபந்தனைகள்

  1. இந்த ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “டிக்கெட்” என்ற சொல், பயணி டிக்கெட் மற்றும் பேகேஜ் செக் அல்லது பொருந்தினால் இந்த பயணத்திட்டம்/ரசீதைக் குறிக்கிறது. இந்த நிபந்தனைகளும் அறிவிப்புகளும் அங்கமாகத் திகழ்கின்ற எலக்ட்ரானிக் டிக்கெட்டாக இருந்தால், "பயணம்" என்பது "போக்குவரத்து என்பதற்கு சமமான வார்த்தையாகும், "விமான நிறுவனம்" என்பது பயணி அல்லது அவரது பேகேஜை அழைத்துச் செல்ல அல்லது அழைத்துச்செல்ல உறுதியளிக்கின்ற அல்லது அத்தகைய விமானச் சேவையை வழங்குவது தொடர்பான பிற சேவையை அளிக்கின்ற எல்லா விமான நிறுவனங்களையும் குறிக்கிறது, "எலக்ட்ரானிக் டிக்கெட்" என்பது, விமான நிறுவனத்தால் அல்லது அதன் சார்பாக வழங்கப்படுகிற பயணத்திட்டம்/ரசீது, பொருந்தினால் எலக்ட்ரானிக் கூப்பன், போர்டிங் ஆவணத்தைக் குறிக்கிறது, "வார்சா சாசனம்" என்பது 12 அக்டோபர் 1929 அன்று வார்சாவில் கையொப்பமிடப்பட்ட சர்வதேச விமானப் பயணம் தொடர்பாக குறிப்பிட்ட சில விதிகளின் ஒருங்கிணைப்புக்கான சாசனம், அல்லது 28 செப்டம்பர் 1955 அன்று தி ஹேக்யூவில் திருத்தப்பட்ட சாசனம் ஆகியவற்றில் பொருந்தக்கூடிய ஒன்றைக் குறிக்கிறது, "மாண்ட்ரீல் சாசனம்" என்பது 28 மே 1999 அன்று மாண்ட்ரீலில் கையொப்பமிடப்பட்ட சர்வதேச விமானப் பயணம் தொடர்பாக குறிப்பிட்ட சில விதிகளின் ஒருங்கிணைப்புக்கான சாசனத்தைக் குறிக்கிறது..
  2. இதன்படி விமான நிறுவனமானது, வார்சா சாசனம் அல்லது மாண்ட்ரீல் சாசனத்தின் வரையறையின்படி “சர்வதேச விமான நிறுவனமாக” இல்லை என்றால் தவிர, அந்த சாசனங்கள் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும்..
  3. மேலே குறிப்பிடப்பட்ட விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு விமான நிறுவனமும் வழங்கும் பிற சேவைகளுக்கும் முரண்பாடு இல்லாத அளவில், ஒவ்வொரு விமான நிறுவனமும் இவற்றுக்கு உட்பட்டதாகும்: (I) டிக்கெட்டில் உள்ள விதிமுறைகள்; (ii) பொருந்தக்கூடிய கட்டண விவரங்கள்; (iii) அமெரிக்கா அல்லது கனடா மற்றும் அவற்றுக்கு வெளியே உள்ள ஏதேனும் இரு இடங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் (இதற்கு அந்தந்த நாடுகளில் f0fC9-இல் உள்ள கட்டண விவரங்கள் பொருந்தும்) தவிர, விமான நிறுவனத்தின் பயண அனுமதிக்கான நிபந்தனைகள் மற்றும் அவற்றின் அங்கமாகத் திகழ்கின்ற (மற்றும் விமான நிறுவனத்தின் அலுவலகங்களின் விண்ணப்பத்தில் கிடைக்கின்ற) தொடர்புடைய ஒழுங்குமுறைகள்..
  4. டிக்கெட்டில் விமான நிறுவனத்தின் பெயர் சுருக்கமாக வழங்கப்பட்டிருக்கலாம், முழு பெயர் மற்றும் அதன் சுருக்கம் விமான நிறுவனத்தின் கட்டண விவரங்களில் இருக்கும். பயண அனுமதிக்கான நிபந்தனைகள், ஒழுங்குமுறைகள் அல்லது கால அட்டவணைகள்; விமான நிறுவனத்தின் முகவரி டிக்கெட்டில் விமான நிறுவனத்தின் பெயரின் முதல் சுருக்க வடிவத்திற்கு எதிரே காண்பிக்கப்பட்டிருக்கும் புறப்படும் விமான நிலையத்தின் முகவரியே ஆகும்; ஒப்புக்கொள்ளப்பட்ட நிறுத்த இடங்கள் என்பவை, இந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது விமான நிறுவனத்தின் கால அட்டவணைகளில் திட்டமிடப்பட்டுள்ள நிறுத்த இடங்களாகக் காட்டப்பட்டுள்ள பயணியின் வழித்தடத்தில் உள்ள இடங்கள் ஆகும்: இதன்படி பல அடுத்தடுத்த விமானச் சேவை நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டிய பயண சேவையானது ஒரே இயக்கமாகக் கருதப்படும்..
  5. வேறு ஒரு விமானச் சேவை நிறுவனத்தின் வழித்தடத்திற்காக டிக்கெட்டை வழங்கும் ஒரு விமானச் சேவை நிறுவனம் ஒரு ஏஜெண்ட்டாகவே அதைச் செய்கிறது..
  6. விமான நிறுவனத்தின் பொறுப்புக்கான ஏதேனும் விலக்கம் அல்லது வரம்பு இருந்தால், அவை ஏஜெண்ட்டுகளின் வேலையாட்கள், விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பயணத்திற்காக விமான நிறுவனம் பயன்படுத்துகின்ற விமானத்திற்கு சொந்தமான நபர், அதன் ஏஜெண்ட்டுகள், வேலையாட்கள், மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் பலன் அளிக்கும்..
  7. பேகேஜ் செக்கை வைத்திருக்கும் நபரிடமே, செக் செய்த பேகேஜ் வழங்கப்படும். சர்வதேசப் போக்குவரத்தில் அனுப்பப்பட்ட பேகேஜிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அது குறித்த புகாரை எழுத்து வடிவில் அந்த சேதம் கண்டறியப்பட்ட பிறகு, குறைந்தபட்சம் பேகேஜைப் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்; தாமதம் ஏற்பட்டிருந்தால், பேகேஜ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 21 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும். சர்வதேசம் அல்லாத போக்குவரத்து தொடர்பான கட்டண விவரங்கள் அல்லது பயண அனுமதிக்கான நிபந்தனைகளைப் பார்க்கவும்..
  8. இந்த டிக்கெட், விமான நிறுவனத்தின் கட்டண விவரங்கள், பயண அனுமதிக்கான நிபந்தனைகள், அல்லது சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வருடம் வரை பயணம் செய்ய டிக்கெட் செல்லுபடியாகும், பயணம் தொடங்குவதற்கு முன்பு இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பயணத்திற்கான கட்டணம் மாறக்கூடும்.. பொருந்தக்கூடிய கட்டணம் செலுத்தப்படாவிட்டால், போக்குவரத்தை விமான நிறுவனம் மறுக்கலாம்..
  9. நியாயமான தகுந்த நேரத்திற்குள் பயணியையும் பேகேஜையும் விமானத்தில் அழைத்துச் செல்ல விமான நிறுவனம் கூடிய எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது. கால அட்டவணைகளில் அல்லது பிற இடங்களில் காட்டப்பட்டுள்ள நேரங்களுக்கு உத்தரவாதம் கிடையாது, இந்த ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் முன்னறிவிப்பு ஏதுமின்றி வேறு விமானச் சேவைகளை அல்லது வேறு விமானத்தை விமான நிறுவனம் பயன்படுத்தக்கூடும், தேவைப்பட்டால் டிக்கெட்டில் காண்பிக்கப்பட்ட நிறுத்த இடங்களை மாற்றலாம் அல்லது தவிர்க்கலாம். நேரத் திட்டங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. இணைப்பு விமானச் சேவைகளை வழங்குவதற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்பதில்லை..
  10. பயணி அரசாங்க பயணத் தேவைகளுக்கு இணங்க வேண்டும், வெளியேறுவதற்கான, உள்நுழைவதற்கான ஆவணங்கள், தேவையான பிற ஆவணங்களை வழங்க வேண்டும், விமான நிறுவனம் குறித்த நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டும், நேரம் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால் புறப்படுவதற்கான செயல்முறைகளை நிறைவு செய்வதற்குப் போதுமான அவகாசம் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே வர வேண்டும்..
  11. விமான நிறுவனத்தின் ஏஜெண்ட், வேலையாள் அல்லது பிரதிநிதி யாருக்கும், இந்த ஒப்பந்தத்தின் எந்த விதிமுறையையும் மாற்ற அல்லது தள்ளுபடி செய்ய அதிகாரம் கிடையாது.



பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது விமான நிறுவனத்தின் கட்டண விவரங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறி அதன் மூலம், டிக்கெட்டை ஒருவர் வாங்கியிருக்கிறார் என்று தெரிய வந்தால், அவரை பயணத்திற்கு அனுமதிக்காமல் மறுப்பதற்கு விமான நிறுவனத்திற்கு முழு உரிமை உள்ளது.


Close

flysmiles


More about FlySmiles