கனடிய பயணிகள்
கனடிய பயணிகளுக்கான விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (APPR)
கனடிய பயணிகளுக்கான விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (APPR), கனடாவிற்கும் கனடாவில் இருந்தும் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்புகளை வழங்கக்கூடும். “இணைப்பு விமானங்கள் உட்பட, கனடாவிற்கு வரும், கனடாவில் இருந்து செல்லும்” விமானங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். ஒரு பயனியின் பயணத்திட்டத்தில் கனடாவிற்கு வெளியே உள்ள இரண்டு இடங்களுக்கான பயணம் இருந்து, கனடாவிற்கு வருகின்ற அல்லது கனடாவில் இருந்து செல்கின்ற ஒரு விமானம் அவருக்கு இணைப்பு விமானமாக இருந்தால், APPR அவருக்கு பொருந்துமா என்பது கட்டணத்தின் வகை மற்றும் விமானச் சேவை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்ததாக இருக்கும்.
APPR-க்கு இரண்டு நிலைகளில் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது - தொடக்கக் கடமைகள் ஜூலை 15, 2019 அன்று அமலுக்கு வந்தது (முக்கியமான தகவல்களின் தகவல் தொடர்பு, விமான நுழைவு மறுக்கப்படுதல், டார்மாக் தாமதங்கள், பேகேஜ், இசைக்கருவிகளின் போக்குவரத்து ஆகியவை தொடர்பாக), எஞ்சிய கடமைகள் டிசம்பர் 15, 2019 அன்று அமலுக்கு வந்தது.
இயல்பான அறிவிப்பு
நீங்கள் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டால் அல்லது உங்கள் விமானம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் தாமதிக்கப்பட்டால் அல்லது உங்கள் பேகேஜ் தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால் விமானப் பயணி பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் குறிப்பிட்ட சில நடத்தைத் தரநிலைகள் மற்றும் இழப்பீட்டிற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். உங்களுக்குள்ள பயணிகள் உரிமைகள் பற்றி மேலும் தகவலுக்கு உங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது கனடியப் போக்குவரத்து ஏஜென்சியின் வலைதளத்தைப் பாருங்கள்.
Si l'embarquement vous est refusé ou si vos bagages sont perdus ou endommagés, vous pourriez avoir droit au titre du Règlement sur la protection des passagers aériens a certains avantages au titre des normes de traitement applicables et a une indemnité. Pour de plus amples renseignements sur vos droits, veuillez communiquer avec votre transporteur aérien ou visiter le site Web de l'Office des transports du Canada.
தொடர்புத் தகவல்
உங்கள் உரிமைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கனடா விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் தொடர்பாக ஏதேனும் புகாரளிக்க விரும்பினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் புகாருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கிய தீர்வு குறித்து உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால், கனடியப் போக்குவரத்து ஏஜென்சியிடமும் நீங்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயண அனுமதிக்கான நிபந்தனைகள்
https://www.srilankan.com/en_uk/corporate/conditions-of-carriage-for-passengers-and-baggage
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள் – customer@srilankan.com
விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (SOR 2019/50) கீழே உள்ள இணைப்பில் கிடைக்கும்.
http://www.gazette.gc.ca/rp-pr/p2/2019/2019-05-29/html/sor-dors150-eng.html
கனடியப் போக்குவரத்து ஏஜென்சி - https://www.canada.ca/en/transportation-agency.html
விமான நுழைவு மறுக்கப்படுதல்
சில சமயங்களில் பயணிகள் விமானத்தில் இருக்கை முன்பதிவு செய்துவிட்டு, எங்களிடம் தெரிவிக்காமலே பயணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து விடுவதுண்டு. விமான முன்பதிவுகளை நாங்கள் கவனமாகக் கண்காணிக்கிறோம், பயணம் செய்ய வராமல் விட்டுவிடுகின்ற பயணிகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு விமானத்திற்கும் விற்பனை செய்யக் கிடைக்கின்ற டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை நாங்கள் தீர்மானிக்கிறோம். இதை சில சமயம் நாங்கள் சரியாகச் செய்யாமல் போகின்ற சில சம்பவங்களும் நடப்பது, இப்படி ஆகும் சமயங்களில் அதீதமாக முன்பதிவு செய்யப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதீதமாக முன்பதிவு செய்யப்படும் சூழ்நிலைகளில், கட்டாயமாக விமானத்தில் நுழைய பயணிகள் மறுக்கப்படும் முன்பு, நாங்கள் தானாக முன்வந்து கொடுக்கும் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு, தங்கள் இருக்கையை விட்டுக் கொடுக்க விரும்புகிறார்களா என்று பயணிகள் அனைவரிடமும் நாங்கள் கேட்போம். இப்படி முன்வந்து விட்டுக் கொடுக்கும் பயணிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நாங்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்துவோம். பின்வரும் பயணிகளை நாங்கள் விமானத்தில் நுழைய மறுப்பது அரிது:
- பெரியவர்கள் உடன் பயணிக்காத சிறுவர்கள்
- உடல் குறைபாடு உள்ள பயணிகள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ளும் நபர்கள்
- ஒன்றாகப் பயணிக்கும் குடும்பத்தினர்
- அதே டிக்கெட்டில் முன்னர் விமானத்தில் நுழைய மறுக்கப்பட்ட பயணி
பாதுகாப்பு, காவல் அல்லது உடல் நலக் காரணங்கள் தவிர்த்து, ஏற்கனவே விமானத்தில் ஏறிய பயணியை நாங்கள் வெளியேற்றுவதும் இல்லை.
உங்களுக்காக மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுப்பது, உங்களுக்குத் தகவல் தெரிவிப்பது, தேவையான வசதிகள் வழங்குவது, டிக்கெட்டிற்கான பணத்தைத் திருப்பியளிப்பது, உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக இளம் பீட்டை வழங்குவது போன்றவை கூடுதல் உரிமைகளில் அடங்கும்.
விமானத்தில் நுழைய மறுக்கப்படும் சூழல்களில், பின்வரும் தொகைகளை உங்களுக்கு இழப்பீடாக நாங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்:
- $900 CAD: பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;
- $1,800 CAD: பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான, ஆனால் ஒன்பது மணி நேரத்திற்கு குறைவான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;
- $2,400 CAD, பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஒன்பது மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;
தாமதங்கள் மற்றும் விமானம் ரத்துசெய்யப்படுதல்
விமானம் தாமதமானால் அல்லது ரத்துசெய்யப்பட்டால், இவற்றை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்:
- தாமதம்/ ரத்துசெய்யப்பட்டதற்கான காரணம்;
- உங்களுக்கு நாங்கள் வழங்கப் போகின்ற கவனிப்பு மற்றும் இழப்பீடு; மற்றும்
- CTA இடம் உங்களுக்குள்ள தெரிவுகள் உட்பட, எங்களுக்கு எதிராக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகள்.
கூடிய விரைவில் புதிய விமானத்தின் நிலை பற்றிய தகவலை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். தாமதம் ஏற்படும் சூழல்களில், புதிய புறப்பாடு நேரம் நிர்ணயிக்கப்படும் வரை அல்லது புதிய பயண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நிலை பற்றிய தகவலையும் உங்களுக்கு வழங்குவோம்.
உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான எங்களுக்குள்ள பொறுப்பானது, விமானச் சேவை தடை பட்டதற்கான காரணத்தைப் பொறுத்தது.
- தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாக இருந்து, பாதுகாப்பு தொடர்பானதாக இல்லாமல் இருந்தால், உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீட்டை நாங்கள் வழங்கி, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவோம் அல்லது உங்களுக்குப் பணத்தைத் திருப்பியளிப்போம்.
- தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாக இருந்து, பாதுகாப்பு தொடர்பானதாக இருந்தால், உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீட்டை நாங்கள் வழங்கி, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவோம் அல்லது உங்களுக்குப் பணத்தைத் திருப்பியளிப்போம்.
- தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்து, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவது மட்டுமே எங்கள் கடமையாக இருக்கும்.
எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளில் அடங்குபவை:
- விமானத்தின் இயக்கத்தை சாத்தியமற்றதாக்கும் வானிலை அல்லது இயற்கைப் பேரிடர்கள்;
- விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள்;
- விமான நிலைய செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள்;
- மருத்துவ அவசர சூழ்நிலைகள்;
- பாதுகாப்பு அச்சுறுத்தல்;
- விலங்குகள் மோதுதல்;
- போர் அல்லது அரசியல் நிலையற்ற தன்மை;
- சட்டவிரோதமான செயல்கள் அல்லது நாசங்கள்;
- விமானிகளுக்கு வரும் அறிவிப்பு (கனடிய விமான ஒழுங்குமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி)
- விமான நிறுவனத்திற்குள் அல்லது விமான நிலையம் அல்லது விமான வழி செலுத்தல் சேவை வழங்குநர் போன்ற அத்தியாவசியமான சேவை வழங்குநர் நிறுவனங்களுக்குள் ஏற்படும் தொழிலாளர் பிரச்சனைகள்;
- விமானத் தயாரிப்பு நிறுவனம் அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியால் கண்டறியப்பட்ட, பயணிகளின் பாதுகாப்பைக் குறைக்கின்ற வகையில் விமானத்தில் உள்ள ஒரு உற்பத்திக் குறைபாடு; அல்லது
- போலீஸ், செக்யூரிட்டி அல்லது சுங்கத்துறை அதிகாரியின் கோரிக்கை.
நாங்கள் வழங்கும் கவனிப்பு:
விமானச் சேவையில் ஏற்படும் தடங்கலானது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததாக இருந்தால் தவிர, விமானச் சேவையில் ஏற்பட்ட தடை பற்றி திட்டமிடப்பட்ட புறப்பாடு நேரத்திற்கு குறைந்தபட்சம் 12 நேரம் முன்னதாக உங்களுக்கு நாங்கள் அது பற்றித் தெரிவிக்காவிட்டால், விமானம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது இரண்டு மணி நேரம் தாமதமானால் உங்களுக்கு நாங்கள் இவற்றை வழங்குவோம்:
- தகுந்த அளவுகளில் உணவு, பானம்; மற்றும்
- தகவல்தொடர்புக்கான அணுகல் (எ.கா. இலவச Wi-Fi).
புதிய விமானத்திற்காக இரவு முழுதும் நீங்கள் காத்திருக்க வேண்டி இருந்தால், கட்டணம் ஏதும் இல்லாமல் உங்களுக்கு நாங்கள் ஹோட்டல் அல்லது அதற்கு இணையான தங்கும் வசதியை வழங்குவோம்; அது மட்டும் இன்றி அங்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் இலவசப் போக்குவரத்து வசதியையும் வழங்குவோம்.
நாங்கள் வழங்கக்கூடிய இழப்பீடு:
விமானச் சேவைகள் ஏற்படும் தடங்கல் குறித்து முன்கூட்டியே 14 நாட்களுக்குள் உங்களுக்கு நாங்கள் தெரிவித்திருந்தால், விமானச் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கான காரணம் விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் இருக்கும் ஒன்றாக இருந்தால், பாதுகாப்பு தொடர்பானதாக இல்லாமல் இருந்தால், விமானத் தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்கள் காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நாங்கள் இழப்பீட்டை வழங்குவோம். இந்த இழப்பீடானது, தாமதமான நேர அளவின் அடிப்படையில் இருக்கும், இது உங்கள் டிக்கெட்டில் உள்ள சென்று சேர வேண்டிய இடத்திற்கு விமானம் வந்து சேர்ந்த நேரத்தை வைத்துத் தீர்மானிக்கப்படும்.
தாமதத்தின் நேர அளவு:
- 3 முதல் 6 மணி நேரம் வரை இருந்தால்: உங்களுக்கு CAD $ 400 இழப்பீடு வழங்கப்படும்;
- 6 முதல் 9 மணி நேரம் வரை இருந்தால்: உங்களுக்கு CAD $ 700 இழப்பீடு வழங்கப்படும்;
- 9 மணி நேரத்திற்கு மேல் இருந்தால்: உங்களுக்கு CAD $ 1000 இழப்பீடு வழங்கப்படும்;
வேறொரு நாட்டில் உள்ள பயணி பாதுகாப்பு விதிமுறைகளின், இதே நிகழ்வுக்காக நீங்கள் ஏற்கனவே இழப்பீட்டைப் பெற்றிருந்தால், கனடிய ஒழுங்குமுறைகளின் கீழ் நீங்கள் மீண்டும் இழப்பீட்டைப் பெற முடியாது. எங்களிடம் இழப்பீட்டுக்கான கிளைமைத் தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு வருட அவகாசம் உள்ளது, மேலும் அதை எழுத்துப்பூர்வமாகவே தாக்கல் செய்ய வேண்டும். பணம் செலுத்தப்படுவது பற்றிய அறிவுறுத்தல்களுடன் 30 நாட்களுக்குள் உங்களுக்கு நாங்கள் பதிலளிப்போம் அல்லது ஏன் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான காரணத்தைக் கூறுவோம்.
ரொக்கமாக உங்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்பதையும், வேறு எந்தெந்த வடிவங்களில் எங்களால் இழப்பீட்டை வழங்க முடியும் என்பது பற்றியும் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக நாங்கள் தெரிவிப்போம். அவற்றில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை இருக்கும்.
மீண்டும் விமானத்தை முன்பதிவு செய்து கொடுப்பதால் உங்கள் பயணத் தேவைகள் நிறைவேறாது அல்லது பயணம் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை என்பதால் பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தேர்வு செய்தால், பணம் திருப்பியளிப்பதுடன் கூடுதலாக இழப்பீடாக உங்களுக்கு CAD $ 400 வழங்கப்படும்.
14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இருக்கைகள்
14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அருகில் இருக்கும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்வோம், இதை செக்-இன் சமயத்தில் அல்லது போர்டிங் கேட்டில், கூடுதல் கட்டணம் இன்றி செய்து கொடுப்போம். 4 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தையாக இருந்தால், பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குப் பக்கத்திலேயே இருக்கும் இருக்கையை வழங்குவோம், 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குப் பக்கத்திலேயே இருக்கும் இருக்கையை எங்களால் வழங்க முடியாவிட்டால், அதே வரிசையில் ஒரு இருக்கைக்கு மேல் தள்ளி இல்லாத இருக்கையை வழங்குவோம். அருகாமையில் இருக்கைகள் எதுவும் கிடைக்காவிட்டால், தானாக முன்வந்து யாராவது இருக்கை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்களா என்று கேட்போம்.
இசைக்கருவிகள்
கேபின் பேகேஜாக அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் பொருந்துகின்ற இசைக்கருவி (சிறிய புல்லாங்குழல்கள் அல்லது வயலின்கள் போன்றவை) உங்கள் கேபின் பேகேஜ் வரம்பின் ஒரு பகுதியாக கட்டணம் இன்றி கொண்டு செல்லப்படலாம்.
இருக்கைக்கு மேல் உள்ள பை வைக்கும் இடத்தில் வைக்க முடியாத அளவு பெரிதாக இருக்கும் அல்லது இயல்பான கேபின் பேகேஜ் அளவுகள் அல்லது எடையை விட அதிகமாக உள்ள (பேஸ் அல்லது செல்லோ போன்ற) இசைக்கருவிகளைக் கொண்டு செல்ல, குளோபல் காண்டாக்ட் சென்டர் மூலம் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து கொள்வதன் மூலம், அதற்கென்று நீங்கள் கூடுதலாக ஒரு இருக்கையை வாங்கிக் கொள்ளலாம்.
மாற்றாக, செக் செய்த பேகேஜ் வரம்பின் ஒரு பகுதியாக உங்கள் இசைக் கருவியை நீங்கள் செக்-இன் செய்து கொண்டு செல்லலாம் அல்லது செக் செய்த பேகேஜ் வரம்பை நீங்கள் மீறி விட்டால், கூடுதல் பேகேஜை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் அல்லது தொலைந்து போதல்
பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டால், பயணி விமானத்தில் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் அல்லது வந்து சேர்ந்து 48 மணி நேரத்திற்குள் எழுத்துப்பூர்வமாகப் புகாரளிக்க வேண்டும். பேகேஜ் வருவதில் தாமதம் ஏற்பட்ட பயணிகள், உடனடியாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஏற்பட்ட செலவுகளுக்காக, இடைக்கால நிவாரணம் (IR) கிளைம் செய்யத் தகுதி பெறுவார்கள். (IR பேகேஜ் கிளைம் படிவத்தை cus.bge@srilankan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்)
பேகேஜ் தொலைந்து போய் இருக்க சாத்தியமிருப்பதாக நம்பினால், பேகேஜ் வந்து சேர்ந்திருக்க வேண்டிய தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் கிளைம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பயனியின் பை தொலைந்து போகும்பட்சத்தில் 21 நாட்களுக்குப் பிறகு அது தொலைந்து போனதாகக் கருதப்படும். பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் அல்லது தொலைந்து போவதற்காக இழப்பீட்டை கிளைம் செய்வதற்கு, பயணிகள் தங்களுடைய கிளைமுடன் சேர்த்து இவற்றையும் cus.bge@srilankan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
- போர்டிங் கார்டு
- ரசீதுகள்
- வங்கிக் கணக்கு விவரங்கள்
- பாஸ்போர்ட்
- பை சீட்டு
- கையொப்பம, விடுவிப்பு மற்றும் இழப்பீட்டில் இருந்து காப்பதற்கான படிவம்
உங்கள் பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டால், அது தொலைந்து போயிருந்தால் அல்லது சேதமடைந்தால், நீங்கள் ஏதேனும் கூடுதல் பேகேஜ் கட்டணம் செலுத்தி இருந்தால் அதை நாங்கள் திருப்பி வழங்கி விடுவோம்.
கனடாவிற்கு வரும் அல்லது கனடாவில் இருந்து செல்லும் விமானங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவற்றுக்கு மாண்ட்ரீல் சாசனம் பொருந்தக்கூடும், ஆகவே பேகேஜ் வருவதில் ஏற்படும் தாமதம் அல்லது இழப்புக்கான பொறுப்பில் உள்ள வரம்புகள் பற்றி அதிலேயே பார்க்கலாம்.
டார்மாக் தாமதங்கள்
விமானம் மேல எழும்புவதற்காக அல்லது விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட பிறகு ஏற்படும் தாமத டார்மாக் தாமதம் எனப்படுகிறது.
டார்மாக் தாமதம் ஏற்படும் போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் வழக்கமான நிவாரணத்தை வழங்கும்:
- நன்றாக வேலை செய்கின்ற, கழிவறை வசதி,
- விமானத்தில் தகுந்த காற்றோட்ட வசதி மற்றும் குளிர்விப்பு அல்லது சூடாக்கும் வசதி
- விமானத்திற்குள் இருந்து வெளியே உள்ளவர்களை தொடர்புகொள்ள முடிந்தால், அதற்கான உதவியை வழங்கும்
- தாமதத்தின் நேர அளவு, தாமதம் ஏற்பட்ட நேரம், ஏர்போர்ட் அமைந்துள்ள இடம் ஆகியவற்றைக் கருத்தில், கருத்தில் கொண்டு நியாயமான அளவுகளில் உணவு மற்றும் பானம்.
டார்மாக் தாமதம் ஏற்பட்டால், விமானம் புறப்பட நேரம் குறைவாக இல்லாதிருந்தால், அடுத்த 45 நிமிடங்களில், அதாவது அடுத்த 45 நிமிடங்களில், விமானம் புறப்பட்டு விடும், மற்றும் மேலே குறிப்பிட்ட தர நிலையான சேவையை எங்களால் தொடர்ந்து வழங்க முடியும் என்றால் தவிர, விமானத்தை மேலெழுப்புவதற்காக விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு விமானத்திலிருந்து வெளியேற உங்களுக்கு உரிமை உள்ளது.
பாதுகாப்பு அல்லது காவல் தொடர்பான அல்லது விமானப் போக்குவரத்து அல்லது சுங்கத்துறை கட்டுப்பாட்டு மையம் தொடர்பான காரணங்களுக்காக, விமானத்தில் இருந்து வெளியேறுவது முடியாது என்றால், விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்க வேண்டும் என்கிற பொறுப்பில் இருந்து எங்களுக்கு விலக்கு கிடைக்கிறது.
முடிந்தால், விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை உடல் குறைபாடு உள்ள பயணிகள், உதவிக்கு வந்த நபர்கள் ஆகியோருக்கே முதலில் நாங்கள் வழங்குவோம்.
விமானம் மேல் எழும்புவதற்கு முன் அல்லது தரையிறங்கிய பின், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலையில், உதவி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம்.
தகவல்களுக்கான அணுகல்
நீங்கள் கேட்டால், அறிவிப்புக் காட்சி அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை அனுப்புவதற்கான மாற்று வழிமுறையை விமான நிலைய அதிகாரி வழங்குவார். கோரினால், இது பெரிய எழுத்து அளவில் வழங்கப்படலாம் அல்லது அறிவிப்பு அல்லது கடிதத்தின் நகலை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டண விவரங்கள்
விமானப் பயணி பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் ஒரு விமான நிறுவனத்திற்கு உள்ள கடமைகள் கட்டண விவரங்களின் ஒரு அங்கமாக திகழ்கின்றன, மேலும் கட்டண விவரங்களில் விவரிக்கப்பட்ட ஏதேனும் இணக்கமற்ற அல்லது சீரற்ற விதிமுறை மற்றும் நிபந்தனையை மீறி, அந்த சீரற்ற அல்லது இணக்கமற்ற தன்மையின் அளவில், நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால், APPR-இல் உள்ள விமான நிறுவனத்திற்கான கடமைகளைவிட, பயணிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்ற, பயண அனுமதிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்துவதில் இருந்து விமான நிறுவனத்தை இது விடுவிக்காது.
பயணிகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து தொடர்பான தனது பொறுப்பை, குறிப்பாக பின்வரும் சூழ்நிலைகளில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எப்படி வரம்பிடுகிறது என்பது பற்றிய தகவல் இந்தக் கட்டண விவரங்களில் உள்ளது.
-விமானப் போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளினால் தனிநபருக்கு ஏற்படும் காயம் அல்லது மரணம்
-பயணிகள் தாமதம் மற்றும்
-மேரேஜ் தொலைந்து போவது, சேதமடைவது அல்லது தாமதமாவது போன்ற சூழ்நிலைகளில் சேதங்களுக்குக் கடன்பட வேண்டிய அதிகபட்ச அளவுகளை விவரிக்கிறது.
சர்வதேசப் பயணத்திற்கு, பொறுப்பின் வரம்புகள் சர்வதேச விமானப் பயணத்திற்கான குறிப்பிட்ட விதிகளின் ஒருங்கிணைப்புக்கான சாசனத்திற்கு (மாண்ட்ரீல் சாசனம் என்றும் அழைக்கப்படும்) உட்பட்டதாகும் அல்லது மாண்ட்ரீல் சாசனத்தை அங்கீகரிக்காத நாடுகளில் வார்சா சாசனத்திற்கு உட்பட்டதாகும். ஸ்ரீலங்கா வார்சா, மாண்ட்ரீல் ஆகிய இரண்டு சாசனங்களையும் அங்கீகரித்துள்ளது, 1992ஆம் ஆண்டின் எண் 55 விமான வழிசெலுத்தல் சட்டத்தின் மூலம் இவை இரண்டும் ஸ்ரீலங்காவில் சட்டமாக்கப்பட்டன.
மாண்ட்ரீல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள, பொறுப்புகளுக்கான வரம்புகள் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப திருத்தப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷனால் மறுஆய்வு செய்யப்படுகின்றன (கடைசியாக, கீழே உள்ள பின்னிணைப்பு A-இன் படி, இதுபோன்ற மறுஆய்வானது டிசம்பர் 2019-இல் நடந்தது. ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDR) என்பது, பண நிதி அமைப்பால் உருவாக்கப்பட்ட, சர்வதேச பண வடிவமாகும், மேலும் பல்வேறு மாற்றக்கூடிய நாணயங்களின் எடையிடப்பட்ட சராசரி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 3 டிசம்பர், 2019 அன்று, 1 SDR என்பது 1.82 .கனடிய டாலர்களுக்கு சமமாக இருந்தது
மாண்ட்ரீல் மற்றும் வார்சா சாசனங்கள் எங்கே உள்ளன? மாண்ட்ரீல் சாசனம் 2003 என்பது 18 ஜனவரி 2019 அன்று ஸ்ரீலங்காவில் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்த சர்வதேச உடன்படிக்கையாகும். இது 4 பிப்ரவரி 1948 அன்று ஸ்ரீலங்காவில் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்த வார்சா சாசனம் 1929-இன் விதிகளை நவீனமாக்குகிறது, விமானப் போக்குவரத்து சட்டம் 2018 (மாண்ட்ரீல் சாசனத்தை உள்ளடக்கி) 28 செப்டம்பர் 2018 அன்று அமலுக்கு வந்தது.
ஸ்ரீலங்கா போன்ற சில நாடுகள், மாண்ட்ரீல் சாசனம், வார்சா சாசனம் இரண்டையும் ஏற்றுக்கொண்டன, மேலும் சில நாடுகள் இவற்றில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொண்டன, மற்ற நாடுகள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாடு மாண்ட்ரீல் சாசனத்தை அங்கீகரிக்காவிட்டால், அப்போதும் வார்சா சாசனம் பொருந்தும். மாண்ட்ரீல் அல்லது வார்சா சாசனங்கள் இரண்டில் ஒன்றை ஒரு நாடு அங்கீகரிக்காவிட்டால், வேறு சர்வதேச உடன்படிக்கை எதுவும் பொருந்தாது, விமான நிறுவனம் தனது பொறுப்புக்கான வரம்புகளை தானே அமைத்துக் கொள்ளலாம்.
மாண்ட்ரீல் சாசனமானது, பயணிகள், பேகேஜ், சரக்குகள் ஆகியவற்றை சர்வதேச விமானப் பயணத்தின் மூலம் கொண்டு செல்வதற்கு, விமான நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்பிற்கான வரம்புகளைப் பரிந்துரைக்கிறது, அவை பின்வருமாறு:
- சரக்குகளை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏற்பட்டால் – வரம்பு = கிலோ ஒன்றுக்கு 22 SDR (கட்டுரை 22, பத்தி 3)
- பேகேஜ்களை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏற்பட்டால் – வரம்பு = பயணி ஒருவருக்கு 1288 SDR (கட்டுரை 22, பத்தி 2)
- நபர்களின் விமானப் பயணத்தில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் நேர்ந்த சேதம் தொடர்பாக – வரம்பு = பயணி ஒருவருக்கு 5,346 SDR (கட்டுரை 22, பத்தி 1)
- உடல் காயம் அல்லது மரணம் ஏற்படும் சூழ்நிலையில், ஒரு விமான நிறுவனத்தின் பொறுப்பானது விமானத்திற்குள் அல்லது விமானத்தில் ஏறும்போது அல்லது விமானத்திலிருந்து வெளியே செல்லும்போது ஏற்பட்ட விபத்தினால் நேர்ந்த சேதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒரு விமான நிறுவனம் 128821 SDR-க்கு மிகாமல் சேதங்களுக்குப் பொறுப்பேற்கும், அதன் பொறுப்பை விலக்கவோ குறைக்கவோ முடியாது. விமான நிறுவனம் பின்வருபவற்றை நிரூபித்தால் சேதங்களுக்கு அதன் மீதான பொறுப்பு 128821 SDR-க்கு மிகாமல் இருக்கும்: a) விமான நிறுவனம் அல்லது அதன் வேலையாட்கள் அல்லது ஏஜெண்ட்டுகளின் கவனக்குறைவு அல்லது பிற தவறான செயல் அல்லது செயல்களை செய்யத் தவறியதன் காரணமாக அத்தகைய சேதம் ஏற்படவில்லை; அல்லது b) அத்தகைய சேதமானது ஒரு மூன்றாம் தரப்பின் கவனக்குறைவு அல்லது பிற தவறான செயல் அல்லது செயல்களை செய்யத் தவறியதன் காரணமாகவே ஏற்பட்டது.
பின்னிணைப்பு A
சரக்குப் போக்குவரத்து தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏதேனும் ஏற்பட்டால் (கட்டுரை 22, பத்தி 3) |
கிலோ ஒன்றுக்கு 19 ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDRகள்) |
கிலோ ஒன்றுக்கு 22 SDRகள் |
பேகேஜ் தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏதேனும் ஏற்பட்டால் (கட்டுரை 22, பத்தி 2) |
ஒவ்வொரு பயணிக்கும் 1131 SDRகள் |
ஒவ்வொரு பயணிக்கும் 1288 SDRகள் |
நபர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தின் காரணமாக நேர்ந்த சேதம் தொடர்பாக (கட்டுரை 22, பத்தி 1) |
ஒவ்வொரு பயணிக்கும் 4694 SDRகள் |
ஒவ்வொரு பயணிக்கும் 5-346 SDRகள் |
பயணியின் மரணம் அல்லது உடல் காயத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கு (முதல் டீயருக்கு கட்டுரை 21, பத்தி 1) |
ஒவ்வொரு பயணிக்கும் 113100 SDRகள் |
ஒவ்வொரு பயணிக்கும் 128821 SDRகள் |