இந்தத் தனியுரிமைக் கொள்கையின் நோக்கம்
இந்த வலைத்தளம், குளோபல் காண்டாக்ட் சென்டர் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்துவது, விமான டிக்கெட்களை வாங்குவது போன்ற செயல்களின்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிச் சேகரிக்கிறோம், செயலாக்குகிறோம் என்பது பற்றியத் தகவலை வழங்குவதையே இந்தத் தனியுரிமைக் கொள்கை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள் விமான முன்பதிவை செய்யும்போது அல்லது முன்பதிவில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது, எங்களுடைய ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தில் சேரும்போது, ஒன்வோர்ல்ட் அலையன்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ள ஃப்ரீக்வென்ட் ஃப்ளையர் திட்டத்தில் பங்கேற்கும்போது, எங்களிடமிருந்து ஏதேனும் ஹாலிடே பேக்கேஜை வாங்கும்போது, எங்களிடமிருந்து ஏதேனும் பிற மதிப்புக் கூட்டுச் சேவைகளைப் பெறும்போது, எங்களுடைய செய்திமடலுக்குப் பதிவு செய்யும்போது நீங்கள் வழங்கக்கூடிய மற்ற தரவும் இதில் அடங்கும்.
இந்த வலைத்தளம் குழந்தைகளுக்கானது அல்ல, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் வழங்கினாலொழிய, குழந்தைகள் தொடர்பான தரவை நாங்கள் அறிந்தே சேகரிப்பதில்லை.
உங்களைப் பற்றிய தனிப்பட்டத் தரவை நாங்கள் சேகரிக்கும்போது அந்தந்த சமயங்களில் நாங்கள் வழங்குகின்ற மற்ற தனியுரிமை அறிவிப்பு அல்லது நியாயமான செயலாக்க அறிவிப்பு போன்றவற்றுடன் சேர்த்து இந்தத் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிக்க வேண்டியது முக்கியமாகும், அப்போதுதான் உங்கள் தரவை எப்படி, ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்துக் கொள்ள முடியும். இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, மற்ற அறிவிப்புகளுடன் சேர்த்து புரிந்து கொள்வதற்கானது, அவற்றுக்கு மாற்றானது அல்ல.
டேட்டா கன்ட்ரோலர்
எங்கள் பயணிகள், பணியாளர்கள், மூன்றாம் தரப்பின் தனிப்பட்ட தொடர்பு ஆகியோர் தொடர்பான அனைத்துத் தனிப்பட்ட தொடர்பு மற்றும் எங்களுடைய சொந்த வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பிற தனிப்பட்ட தரவு ஆகிய அனைத்திற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமே டேட்டா கன்ட்ரோலராக இருக்கிறது. அதாவது, தனிப்பட்ட தரவை எப்போது ஏன், எப்படிச் செயலாக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும், பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க நடைமுறைகளையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டிய பொறுப்பும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கே உள்ளது.
ஸ்ரீலங்கன் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாகும். ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிட்டெட், ஸ்ரீலங்கன் நிறுவனம் இரண்டும் சேர்த்து, மொத்தமாக குழுமம் என்று குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் (“GDPR”) நோக்கத்திற்காக, ஸ்ரீலங்கன் தனது மேற்பார்வை அமைப்பாக UK தகவல் ஆணையர் அலுவலகத்தை நியமித்துள்ளது. லண்டனில் உள்ள எங்கள் அலுவலகமே EU-இல், GDPR நோக்கங்களுக்கான பிரதிநிதியாகச் செயல்படும். இது 7வது தளம், ஒன் லேம்ப்ட்டன் சாலை, ஹான்ஸ்லோ, மிடில்செக்ஸ், TW3 1JB, யுனைட்டெட் கிங்டம் என்ற முகவரியில் உள்ளது.
இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, குழுமத்தின் சார்பாக வழங்கப்படுகிறது, இந்தத் தனியுரிமைக் கொள்கையில் “ஸ்ரீலங்கன்”, "நாங்கள்", "எங்கள்" அல்லது "எங்களுடைய" என்று நாங்கள் குறிப்பிடும்போது, குழுமத்தில் உள்ள, உங்கள் தரவைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான உரிய நிறுவனத்தையே நாங்கள் குறிப்பிடுகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் ஒரு சேவையை வாங்கும்போது, உங்கள் தரவிற்கு எந்த நிறுவனம் கண்ட்ரோலராக இருக்கும் என்பதை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். ஸ்ரீலங்கன் நிறுவனமே கண்ட்ரோலர் ஆகும், மேலும் இந்த வலைத்தளத்திற்கும் பொறுப்பாகும்.
தரவுப் பாதுகாப்பு அதிகாரி
இந்தத் தனியுரிமைக் கொள்கை தொடர்பான கேள்விகளைக் கவனித்துக் கொள்வதற்காக, ஸ்ரீலங்கன் நிறுவனம் ஒரு தரவுப் பாதுகாப்பு அதிகாரியை நியமித்துள்ளது. உங்கள் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள் உட்பட, இந்தத் தனியுரிமைக் கொள்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி DPO-ஐத் தொடர்பு கொள்ளுங்கள்:
தொடர்பு விவரங்கள்
- சட்டப்பூர்வத் தரப்பின் முழுப் பெயர்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிட்டெட்
- DPO-இன் பெயர் அல்லது தலைப்பு: தரவுப் பாதுகாப்பு அதிகாரி
- மின்னஞ்சல் முகவரி: privacy.office@srilankan.com
- அஞ்சல் முகவரி: ஏர்லைன் சென்டர்”, பண்டாரநாயகே சர்வதேச மையம், காட்டுநாயக்கே 11450, ஸ்ரீலங்கா.
- தொலைபேசி எண்: (0094) 19733 4488
- தொலைநகல் எண்: (0094) 19733 5588
மாற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய உங்கள் கடமை
உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு துல்லியமாகவும் நடப்பில் உள்ளதாகவும் இருக்க வேண்டியது முக்கியமாகும். எங்களிடம் நீங்கள் தொடர்பில் இருக்கும் வரை, உங்கள் தனிப்பட்ட தரவில் நிகழும் மாற்றங்களைப் பற்றி உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதும் உங்கள் கடமையாகும்.
மூன்றாம் தரப்பு இணைப்புகள்
இந்த வலைத்தளத்தில், மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள், ‘பிளக்-இன்’கள் மற்றும் செயலிகளுக்கான இணைப்புகள் இருக்கலாம். இவற்றை ஸ்ரீலங்கன் நிறுவனம் பராமரிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. அந்த இணைப்புகளைக் கிளிக் செய்வதால் அல்லது அந்த இணைப்புகளை இயக்குவதால், உங்களைப் பற்றிய தரவை மூன்றாம் தரப்பினர் சேகரிப்பதோ பகிர்வதோ சாத்தியமாகலாம். இந்த மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை, அவர்களின் தனியுரிமை அறிக்கைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து வெளியேறும்போது நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் உரிய தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.