மோசடிகளைத் தவிர்ப்பதற்கும், உங்களுடைய FlySmiLes ID பாதுகாப்பிழந்துவிட்டது என்று நினைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்த உதவி குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ஃபோன் அழைப்பு மூலமாகவோ தொடர்புகொண்டு கணக்குப் பெயர் கடவுச்சொல் போன்றவற்றை யாராவது கேட்டால், அது அநேகமாக மோசடி முயற்சியாக இருக்க வாய்ப்புள்ளது.
மோசடிக்காரர்கள் ஒருவரது தனிப்பட்ட தகவல்களைப் பெற, போலி மின்னஞ்சல்கள் விளம்பரங்கள், SMS செய்திகள், உடனடிச் செய்திகள், ஃபோன் அழைப்புகள் என எந்த வழியையும் பயன்படுத்துவார்கள் (ஆனால் இவை மட்டுமே அல்ல). உங்களது FlySmiLes ID கடவுச்சொல் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்களைப் பகிரச் செய்ய தந்திரமாக அவர்கள் முயற்சி செய்வார்கள். உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் மோசடிகளைத் தவிர்க்கவும் உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ.
உங்கள் FlySmiLes ID-ஐ பாதுகாத்திடுங்கள்
ஒருபோதும் உங்கள் FlySmiLes ID-ஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சரிபார்ப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாகவோ அல்லது உங்களுக்கு உதவிடும்போதோ ஒருபோதும் இவற்றைக் கேட்காது. உங்களுடைய FlySmiLes ID பாதுகாப்பிழந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக உங்கள் கடவுச்சொல்லை மாற்றுமாறு பரிந்துரைக்கிறோம்.
சந்தேகப்படும்படியாக ஃபோன் அழைப்பு அல்லது வாய்ஸ் மெயில் உங்களுக்கு வந்தால்
உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் கடவுச்சொற்களையும் நீங்களே பகிரும்படி செய்வதற்காக, மோசடிக்காரர்கள் பிற உண்மையான நிறுவனங்களின் மின்னஞ்சல், SMS செய்திகள் போன்றவற்றை நகலெடுத்து அனுப்பவும் முயற்சி செய்வார்கள் (அங்கீகாரமற்ற முறையில் கார்ப்பரேட் லோகோக்கள், வடிவமைப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உட்பட). சந்தேகத்திற்கிடமான அல்லது தேவையின்றி வந்துள்ள செய்திகளில் உள்ள இணைப்புகளை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்யவோ திறக்கவோ வேண்டாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை மாற்றவோ புதுப்பிக்கவோ வேண்டுமென்றால் நேரடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஃபிஷிங் மோசடியாக இருக்க வாய்ப்புள்ள முயற்சிகளை இந்த அடையாளங்களைக் கொண்டு நீங்கள் கண்டுகொள்ளலாம்:
-
மின்னஞ்சலை அனுப்புபவரின் பெயரும், அவர் தனது நிறுவனம் என்று கூறும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொருந்தாது.
-
நீங்கள் நிறுவனத்திற்கு வழங்கிய உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் அதுவாக இருக்காது.
-
செய்தியானது, “அன்பார்ந்த வாடிக்கையாளரே” என்பது போன்ற மிகப் பொதுவான தொடக்கத்தைக் கொண்டிருக்கும். நம்பகமான நிறுவனங்களாக இருந்தால் செய்தியில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டுத் தொடங்குவார்கள்.
-
பார்ப்பதற்கு இணைப்பு நம்பகமானது போல் தெரியும், ஆனால் கிளிக் செய்தால் நிறுவனத்தின் வலைத்தள முகவரியுடன் பொருந்தாத வேறொரு வலைத்தளத்திற்குச் செல்லும்.
-
நீங்கள் நிறுவனத்திடம் இருந்து ஏற்கனவே பெற்றுள்ள செய்திகளில் இருந்து இந்த செய்தி மிகவும் வித்தியாசமாகக் காணப்படும்.
-
செய்தியானது, கிரெடிட் கார்டு விவரங்கள், கணக்கின் கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கும்.
-
செய்தியானது, நீங்கள் அனுப்புமாறு கேட்காமல் வந்திருக்கும், அதில் ஏதேனும் கோப்பு இணைக்கப்பட்டிருக்கும்.
ஃபிஷிங் முயற்சிகளையும், பிற சந்தேகப்படும்படியான செய்திகளையும் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் புகாரளியுங்கள்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வருவதாகக் கூறிக் கொள்ளும், சந்தேகப்படும்படியான மின்னஞ்சல் பற்றிப் புகாரளிக்க, அந்த மின்னஞ்சலை cybersecurity@srilankan.com என்ற முகவரிக்கு நீங்கள் அப்படியே அனுப்பலாம். தலைப்பில் உள்ள தகவல்களை அப்படியே முழுவதும் சேர்க்கவும். இந்த மின்னஞ்சல் முகவரியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கண்காணிக்கிறது, இருந்தாலும் நீங்கள் அனுப்பும் புகாருக்கு தானாக அனுப்பப்படும் ஒப்புகை பதில் மட்டுமே பெறுவீர்களே தவிர தனித்தனியாக பதில் அனுப்பப்படாது .