3.1 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலைத்தளத்தில் பிற மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். உங்களுக்குப் பொதுவான தகவல்களைப் பெறும் நோக்கத்திற்காகவே இந்த இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, இப்படி இணைப்புகள் வழங்கப்படுவதால் அத்தகைய மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்ற, வழங்கப்படுகின்ற அல்லது விற்பனை செய்யப்படுகின்ற எந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆதரிப்பதாகக் கருதப்பட முடியாது. மேலும் இந்த வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்துவது, அவற்றில் வெளியிடப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் கணினி வைரஸ்கள் அல்லது அழிக்கும்தன்மை கொண்ட வேறு எந்தப் பாதிப்புகளும் இல்லாமல் இருக்கும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தரவாதம் எதையும் வழங்க முடியாது, வழங்காது. மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகளை வழங்குவதால், மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் வழங்குகின்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எதையும் நீங்கள் வாங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைப்பதாகவோ வலியுறுத்துவதாகவோ அர்த்தமாகாது.
3.2 எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளுக்குரிய மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருக்கின்ற உள்ளடக்கம் எதற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது அல்லது பொறுப்பாகாது, அத்தகைய மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருக்கின்ற உள்ளடக்கம், அந்த உள்ளடக்கம் அல்லது தகவல்களின் துல்லியம், முழுமைத்தன்மை, சட்ட இணக்கம் அல்லது நம்பகத்தன்மை தொடர்பாக, அல்லது அத்தகைய மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் உள்ள தகவல்கள் அல்லது பிற உள்ளடக்கங்கள் உங்களுடைய குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றோ எந்தவிதமான வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதங்கள், உறுதிகள் மற்றும்/அல்லது பிரதிநிதித்துவங்கள் எதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை. எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளுக்குரிய வலைத்தளங்களை நீங்கள் அணுக முடிவு செய்தால், அதில் உள்ள ஆபத்துகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுதான் அணுகுகிறீர்கள்.
3.3 மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் எதிலிருந்தும் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பது அல்லது பயன்படுத்துவது தொடர்பான பொறுப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்க முடியாது, ஏற்காது.
3.4 மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்துவது (அல்லது பயன்படுத்த முடியாமல் போவது) அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் உள்ள தகவல்களை நீங்கள் பயன்படுத்துவது (அல்லது பயன்படுத்தத் தவறுவது) போன்றவற்றின் விளைவாக ஒப்பந்தம் சார்பாக, சட்டப்படியான தவறுகள் சார்பாக அல்லது பிற வழிகளில் நேர்கின்ற எந்தவிதமான (நேரடியான, மறைமுகமான, விளைவான அல்லது பிறவகை) இழப்பு அல்லது சேதம் எதற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது.
3.5 மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருக்கின்ற உள்ளடக்கம் அல்லது தகவல்களை நான் நம்புவதன் அடிப்படையில் நான் எடுக்கின்ற முடிவு அல்லது மேற்கொள்கின்ற பரிவர்த்தனை எதற்கும், அல்லது ஏதேனும் காரணத்தினால் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை அணுகுவதில் ஏற்படும் தாமதங்கள் அல்லது குறுக்கீடுகள் காரணமாக நேர்கின்ற பொறுப்புகள் எதற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலைத்தளத்தின் வழியாக தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்குகின்ற ஏதேனும் வணிகம், அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களை வழங்குகின்ற நிறுவனம் எதையும் பொறுப்பாக்க மாட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன்.
3.6 மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருக்கும் உள்ளடக்கமானது, அந்தந்த வலைத்தளத்தின் வழங்குநர் அல்லது உரிமதாரருக்குச் சொந்தமானது, மேலும் அந்த மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் குறிப்பிட்டுள்ளபடி பொருந்தக்கூடிய பதிப்புரிமைச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டதாகும். மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் வழங்குநரிடம் இருந்து வெளிப்படையான, எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், அந்த மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருக்கும் உள்ளடக்கங்கள் அல்லது தகவல்களை, மறு உருவாக்கம் செய்தல், மறுபரப்புதல், பரப்புதல், விநியோகித்தல், வெளியிடுதல், பிராட்காஸ்ட் செய்தல், சுற்றறிக்கை மூலம் வெளிப்படுத்துதல் அல்லது வணிகரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்ய மாட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன்.